Monday, January 17, 2011

18-01-2011

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞனின் சடலம் மூன்று நாட்களின் பின்னர் ஒதுங்கியது
நாவிதன் வெளி சம்பலவத்த பாலத்தடியில்
பெருக்கெடுத்து ஓடிய நீரில் அடித்துச்
செல்லப்பட்ட நடேசபிள்ளை பிரதீபன்
 (வயது 18) இளைஞனின் சடலம்
வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.தைப்
 பொங்கலுக்காக கடந்த 11 ஆம் திகதி
 தனது தாயாருடன் ஆடைகளைக்
கொள்வனவு செய்ய இந்த இளைஞன்
 கல்முனைக்கு வந்துள்ளான். மீண்டும்
 நாவிதன்வெளிக்குச் செல்ல முடியாதளவு
 நீர் பெருக்கெடுக்கின்றது என்பதை அறிந்த
 இளைஞனும் தாயாரும் களுவாஞ்சிக்குடிக்கு
 வந்து வள்ளத்தில் செல்ல முடிவு செய்துள்ளனர்.
வள்ளத்தில் செல்வதானால் மண்டூரூடாக
 நாவிதன்வெளி செல்லும் சம்பலவத்த
 பாலத்தைக் கடக்க வேண்டும். இந்நிலையில்
 வள்ளத்தினால் பாலத்தைக் கடப்பதற்குரிய
சந்தர்ப்பம் கிடைக்காதபோது நீர்மட்டம்
குறைந்துள்ள பகுதியினால் நடந்து செல்ல
 எத்தனித்துள்ளனர். இவ்வேளையில் ஏற்பட்ட
வெள் ளப் பெருக்கினால் இவர் இழுத்துச்
செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்த தினத்திலிருந்து மூன்று
தினங்களின் பின்னரே இவரது சடலம்
சம்பலவத்த பாலத்திற்கு அருகில்
கரையொதுங்கியுள்ளது.
124 

18-01-2011

மானிப்பாயில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம்: பூசகரது துணைவியார் காயம்!

 
124
யாழ் மானிப்பாய் பொலிஸ் எல்லைக்குட்பட்ட
 பகுதியில் இனந்தெரியாத ஆயுததாரிகள்
மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில்
 பூசகர் ஒரவரது துணைவியார் ஒருவர்
காயமடைந்த நிலையில் யாழ்
போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் ஆஸ்பத்திரி
 வீதி மானிப்பாயைச் சேர்ந்த
ஸ்ரீபாலசுந்தரம் நீநோசா (வயது 31)
என்னவரே காயமடைந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில்
 வீட்டு வாசலின் முன்பாக நின்றுகொண்டிருந்த
போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்
 தெரியாத இருவர் துப்பாககிப் பிரயோகம்
 மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக
 தெரிவிக்கபடுகிறது.
கடந்த வாரங்களில் தொடர் கடத்தல்கள்
 கொலைகள் அதிகளவில் இடம்பெற்றிருந்த
 போதிலும் கடந்த ஒரு சில நாட்களாக
இவ்வாறான சம்பவங்கள்
குறைவடைந்திருந்தன.ஜனாதிபதி
 மஹிந்தராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கான
பயணத்தினை மேற்கொண்டிருந்த ஒரே நாளில் இவ்வா
றான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

கேரதீவு - சங்குப்பிட்டி பாலத்தை திறந்துவைத்தார்
விமானப்படை விசேட விமானம் மூலம் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவும் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் பலாலி விமான
நிலையத்தை பிற்பகல் வேளையில் வந்தடைந்தனர்.
 யாழ். வருகை தந்த ஜனாதிபதியை சர்வ மததலை
-வர்கள் ஆசி வழங்கி தமிழ் பாரம்பரியங்களுடன்
வரவேற்றனர்.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண
 ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, ஈ.பி.டி.பி
 நாடளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார்,
 சி.அலன்ரின், யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா
 சுகுமார், யாழ் .மாநகர முதல்வர் யோகேஸ்வரி
பற்குணராசா மற்றும் யாழ். மாவட்ட இராணுவ
தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் ஜனாதிபதியை
 பலாலி விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.
 288 மீற்றர் நீளம் கொண்ட இந்த இரு
வழிதெரிவிக்கப்படுகிறது.  பாலம் எட்டு மாதங்களுக்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.கேரதீவு - சங்குப்பிட்டி
 பால திறப்பு விழாவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து
-கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


என் காதல்
 
 
காதல் என்றும் புனிதமானது
என்பதை நான் அறிவேன்-----!!
உன்னால் காதல் மடியுமோ
என்று ஏங்குகிறேன்------------!!

ஷஜகான் செய்த தப்பினால்
தாஜ்மகால் உருவானது------!!
நான் செய்த தப்பினால் இன்று
கவிதை தானே உருவாகின்றது---!!

வாலிபம் முடியும் முன்னே
என் வாழ்க்கையும் முடிந்ததடி----!!
ஆசைகள் பல இருந்தும்
அவையும் மடிந்ததடி-----------!!

சொல்லி வருவதில்லை காதல்
சொல்ல முடிவதில்லை காதல்
சொல்ல மொழியும் இல்லை---!!
சொன்னாலும் உனக்கு புரியவில்லை
என் காதல்----!!
by -anoraj
 

17-01-2011

காதலின் விதி



பதுங்குகிறாள் காதலி பயத்தோடு
நெருங்குகிறான் காமுகன் வெறியோடு
தொடுகிறான் அவளை உடல் பசியோடு
மயங்குகிறாள் அவள் முழு மனதோடு

அன்பும் பாசமும்
அறிவியல் நுணுக்கமும்
பண்பும் பயனும்
மனதில் மிகுந்தோட

சல்லாபத்தின் உச்சியில்
சரச நடனங்கள் செல்ல
உல்லாசபுரியில் உவமைகள்
உடலோடு நடனம் நடத்த...
124