மானிப்பாயில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம்: பூசகரது துணைவியார் காயம்!
124
யாழ் மானிப்பாய் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் பூசகர் ஒரவரது துணைவியார் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் ஆஸ்பத்திரி வீதி மானிப்பாயைச் சேர்ந்த ஸ்ரீபாலசுந்தரம் நீநோசா (வயது 31) என்னவரே காயமடைந்துள்ளார். |
இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டு வாசலின் முன்பாக நின்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாககிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. கடந்த வாரங்களில் தொடர் கடத்தல்கள் கொலைகள் அதிகளவில் இடம்பெற்றிருந்த போதிலும் கடந்த ஒரு சில நாட்களாக இவ்வாறான சம்பவங்கள் குறைவடைந்திருந்தன.ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த ஒரே நாளில் இவ்வா றான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது |

No comments:
Post a Comment