Sunday, July 10, 2011

நீர்வேலியில் தோன்றிய அதிசய வானம்.....,,,




இயற்கை அன்னையின் அழகு எப்பவுமே அதிசயிக்கதக்கது தான்.... அனுபவமான ஓவியக் கலைஞனால் நேர்த்தியாக வரையப்பட்ட ஓவியம் போலக் காணப்படுகிறது வானம்...

யாழ்ப்பாணத்தில் உள்ள நீர்வேலி பிரதேசத்தின் ஒரு தோட்டத்திலிருந்தே மேற்படி அழகிய காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது....
 

நேற்று மாலை 5 .30 மணியிலிருந்து 6 மணி வரையான காலப்பகுதியினுள் இவ்வாறு ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வானம் அதிசயமாகக் காணப்பட்டது,,,,,,,,,,,,,,,,,,,,,,

தொண்டமானாறு ஊடான அச்சுவேலி - பருத்தித்துறை வீதி இன்று திறப்பு.......




தொண்டமானாறு ஊடான அச்சுவேலி - பருத்தித்துறை வீதி இன்று ஜுலை 10ம் திகதி திறக்கப்படுமென யாழ் இராணுவக் கட்டளைப் பணியக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 1980ம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக தொண்டமானாறு ஊடான அச்சுவேலி - பருத்தித்துறை வீதி மூடப்பட்டது.

இந்த வீதியைத் திருத்தி... மீண்டும் மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் பணியில் தற்போது இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினர் ஈடுபட்டிருப்பதாக இராணுவ ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வீதி திருத்தப் பணிகளை, யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நேரில் பார்வையிட்டு தேவையான உத்தரவுகளை வழங்கியதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது ,,,

neevely

Thursday, July 7, 2011

யாழ் பெண் பேஸ்புக் மூலம் 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த ஏமாற்றி சாவகச்சேரியில் பெண்......

வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில்
வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி
 தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால்
 பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம்
மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது
 இலட்சம் ரூபாய்வரை பணம் மோசடி
செய்யப்பட்டு உள்ளது அம்பலமாகியுள்ளது.

ஏமாற்றுப் பேர்வழியின் உண்மையான பெயர் கந்தையா
 தர்ஷனா. சொந்த இடம் யாழ். சாவகச்சேரியில்
கல்வயல் கிராமம். 1986 ஆம் ஆண்டு
செப்டெம்பர் 25 ஆம் திகதி பிறந்தவர்.
தற்போது கொழும்பில் இருக்கின்றார்.
இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில்
நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற
பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார்.


பேஸ் புக் பாவனையாளர்களான புலம்பெயர் தமிழர்களில் பல வயதுக்காரர்களையும் கைக்குள் போட்டுக் கொள்வார். இவர் அழகான தோற்றம் உடையவர். குழைந்து பேசுவார். அனுதாபத்தை பெறுதல், கவர்ச்சி காட்டுதல் ஆகிய உத்திகளைக் கையாண்டு பணம் பறிக்கின்றமை இவரின் வாடிக்கை.


பெற்றோர் இறந்து விட்டனர் என்பார், வெளிநாட்டில் படிக்க பெருந்தொகை நிதி தேவை என்பார், மன பாதிப்பு உடையவர் போல கைகளை சவர அலகால் அறுத்துக் காண்பிப்பார். - இவையெல்லாம் அனுதாபம் பெறுகின்றமைக்காக.காதலிக்கின்றமை போல் நடிப்பார், செக்ஸியான தோற்றத்தில் தோன்றுவார்.


கிளுகிளுப்பு ஊட்டுகின்ற வார்த்தைகள் பேசுவார். - இவையெல்லாம் கவர்ச்சி காட்டுதல் என்கிற உத்தியின் கீழ்.
ஸ்கைப், தொலைபேசி ஆகியவற்றின் மூலமாக தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொள்வார். பணம் கிடைத்தமையுடன் அனுப்பியவருடனான தொடர்பை அறுத்துக் கொள்வார்.



சாவகச்சேரியின் கொமர்ஷல் வங்கியில் உள்ள இவரின் கணக்கு ஒன்றுக்கு மாத்திரம் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.

மகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு இருக்கின்ற பணத் தொகையை பார்த்தபோது வங்கியிலேயே தாய் மயங்கி விழுந்த சம்பவமும் இடம்பெற்று உள்ளது. யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி . இந்நபரின் பெயர் ஜெய்சன். யுவதியின் கணக்குக்கு வருகின்ற பணத்தை சொந்தக் கணக்குக்கு இவர் மாற்றிக் கொள்வார்.


தற்போது யுவதியின் கையடக்கத் தொலைபேசி இவரின் பாவனையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி அழைப்பு விடுக்கின்றபோது இவர் படுகொலை அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார். ....

neevely jeyfm

Sunday, June 12, 2011

யாழ்.நகரை அச்சுறுத்தும் கழிவகற்றல்

ஓரு பிரதேசத்தின் முன்னேற்றம், அதன் சுகாதாரம் மற்றும் கல்வியிலேயே முக்கியமாகத் தங்கி உள்ளது. யாழ். மாநகரத்தைச் சிங்கப்பூர் ஆக்குவதாகக் கூறி அரியணை ஏறியவர்களுக்கு இது புரியவில்லை. ஏனெனில், யாழ். மாநகரத்துக்குள் கழிவகற்றல் என்பது மிக மோசமான நிலையிலேயே உள்ளது.

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட பகுதி நிர்வாக ரீதியாக 23 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்புப் பகுதி இவற்றைத் தமது தொழிற்பாட்டுக்காக 7 வலயங்களாகப் பிரித்துள்ளது. நல்லூர், அரியாலை, பாசையூர், குருநகர், யாழ்.பஸார், வண்ணார்பண்ணை, நாவாந்துறை ஆகிய இந்த வலயங்களில் பஸார் மற்றும் குருநகர் வலயங்களில் இருந்தே அதிகளவான கழிவுகள் தினந்தோறும் சேருகின்றன. 

இந்த 7 வலயங்களில் 18,380 வீடுகளில் 82,009 மக்கள் வசிக்கின்றனர். இந்த வலயங்களில் இருந்து தினந்தோறும் சராசரியாக 60 டிரக்டர் லோட்டுக்குக் குறையாத அளவுக் குப்பைகள்  அகற்றப்படுகின்றன. ஆனாலும், முழுமையான  கழிவகற்றல் நடைபெறுவதாகத் தெரியவில்லை. வாகன வசதியின்மை என்பதே சபை இதற்குக் கூறும் முக்கிய பதிலாக இருக்கின்றது.


 
 கழிவகற்றப்படும் ஒழுங்கு
 
 இந்தப் பிரதேசங்களில் வீதிகள் கூட்டித் துப்புரவு செய்யப்படும் குப்பைகள் தற்காலிக சேகரிப் புப் பகுதியில் சேகரிக்கப்பட்டு டிரக்டரில் ஏற்றி அகற்றப்படுகின்றன. வீட்டுக் கழிவுகள் வாரம் இரண்டு தடவை அகற்றப்படுகின்றன. இந்த ஒழுங்குமுறை உத்தரவு களில் இருக்கும் போதும் அது ஒழுங்காக நடைபெறுவதில்லை என்று மக்கள் குறைப்படுகின்றனர்.
 
சபையால் தெருக்கள், வீடுகள், சந்தை, வைத்திய சாலை, ஹோட்டல், பூங்கா தொழிற்சாலைகள் போன்றவற்றில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் அகற்றப்படும் முறையிலும் பெரும் குறைபாடு காணப்படுகிறது. குப்பைகளையும் கழிவுகளையும் ஏற்றிச் செல்லும் டிரக்டர்கள் மூடிய பெட்டிகளைக் கொண்டிருப்பதில்லை. இதனால் வீதியால்  செல்வோருக்கும் பெரும் இடையூறு காணப்படுகிறது. தற்போது காற்றுக்காலம் என்பதால் குப்பையின் துகள்கள் வீதியால் செல்வோரைத் தாராளமாக மூக்கைச் சுழிக்க வைக்கின்றன.  இதுவே வைத்தியசாலைக் கழிவாக இருந்தால் மக்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்படக் கூடிய வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது.  இந்த நிலைமையில் யாழ்ப்பாணம் சிங்கப்பூர் ஆகுமாம் என்பது வேடிக்கைக்குரியதே!
 
கழிவு அழிப்பு
சேகரிக்கப்பட்ட கழிவுகளை  எரியூட்டி அழிக்கும் நடைமுறையே மாநகர சபையால் இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது பொருத்தமற்றது. ஏனெனில் பிளாஸ்ரிக், பொலித்தீன் போன்றவற்றை எரிக்கும் போது CO, SO2 போன்ற வாயுக்கள் வெளியேறி சூழலை மாசுபடுத்தும். எனவே, கழிவுகளைச் சுகாதார முறைப்படி பள்ளங்களை நிரப்புதலுக்கும் பசளை தயாரிப்புக்கும் உட்படுத்துவதே சிறந்த வழிகள். இங்கும் இவை நடைமுறையில் இருந்தாலும் அவை திருப்திகரமான முறையில் நிறை வேற்றப்படுவதாகத் தெரியவில்லை.
 
குப்பைகள் வாகனங்களில் ஏற்றப்படும்போது உக்காத பொருள்களும், சேதனப் பசளை ஆக்கப் படக் கூடிய கழிவுகளும் வேறுபடுத்தி ஏற்றப்படல் வேண்டும். கழிவு சேகரிக்கும் பகுதிகளில்  உரிய முறைப்படி வேறுபடுத்தலுக்கு உட்படுத்தப்படாமல் பெரும்பாலும் கழிவுகள் ஒன்றாகக் கொட்டி ஏற்றப்படுகின்றன. 

நிலம் நிரப்பல்
பள்ளமான காணிப்பரப்புகளைத் தெரிவுசெய்து அங்கு குப்பைகளைக் கொட்டி அதன்மேல் உடனடி யாக 9 அங்குல உயரத்துக்குக் குறையாத அளவு மண் போட்டுப் படையாக மூடும் முறை ஒன்று உள்ளது. (அவ்வாறு மூடாவிட்டால் இலையான் குடம்பி வெளி யேறும்). பின்னர் மறுமுறை குப்பை  கொட்டப்படும். மீண்டும் 9 அங்குலம் மண்படை பரவப்படும். இப் படியாக ஏற்ற அளவு மாறி மாறிப் போடப்பட்டு நிரவும் முறையே சுகாதார முறையிலான நிலம் நிரப்பல். இவ்வாறு நிரப்பப்படும் காணிப் பகுதிகளில் காலப் போக்கில் கட்டட நிர்மாணிப்பணிகளைக்கூட  மேற் கொள்ள  முடியும். கொழும்புப் புறநகர்ப்பகுதியில் இப் படியான நிலங்களிலேயே பெருமளவு கட்டடங்கள் தற்போது கட்டி எழுப்பப்பட்டுள்ளன.
 
 இந்த முறையிலான கழிவகற்றல் இங்கும் மேற் கொள்ளப்படுகிறது. ஆனால்,  உரியமுறைப்படி மண்போட்டு நிரவுதல் நடைபெறுவதில்லை. காக்கை தீவுப்பகுதியில் கொட்டிப் பரவப்பட்ட கழிவுகளால் அந்தப்பகுதி மிகவும் சுகாதாரச் சீர்கேட்டுடன் திகழ்வதை யாவரும் அவதானிக்க முடியும். அதன் அண்மையில் மக்கள் குடியமர்ந்ததால் இப்போது அங்கு குப்பை கொட்டுவதை நிறுத்திவிட்டார்கள். தற்போது சண்டி லிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான கல்லுண் டாய்ப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அங் கும் பாதுகாப்பான முறைகள் எவையும் பின்பற்றப்படா மலேயே குப்பை கொட்டப்படுகின்றது. 
 
தவறுகள்
  • தெருக்களில் " கழிவுகள் சேகரிக்கும்'' பகுதியோ/ தொட்டியோ இல்லை. எனவே மூலை மூடுக்குகளிலும், வீடுகளின் மதிலோரங்களிலும் குப்பைகளைக் குவிப்பதால் அயலவர்களுக்கிடையே சண்டைகள் ஏற்படுகின்றன. 
  • வாரத்தில் இரு தடவை வீட்டுக்கழிவுகள் எடுக்கும் ஒழுங்குகள் இருந்தபோதும் இது பல இடங்களில் ஒழுங்காக நடப்பதில்லை. குப்பை அள்ளுபவர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் பணத்தை எதிர்பார்ப்பதுடன், சில சந்தர்ப்பங்க ளில் கிடைக்கும் பணத்தின் பெறுமதிக்கு ஏற்பவே தெருக்களில் குப்பை அகற்றலை மேற்கொள்கி றார்கள். இதற்குரிய மேற்பார்வையாளர்கள் என்ன செய்கிறார்களோ தெரியாது.
  • குப்பைகள் உக்கக்கூடியவை/ உக்கமுடியாதவை என (தாவரக்கழிவு/ சமையல் கழிவு, கண் ணாடி, உலோகம், பொலித்தின்/ பிளாஸ்ரிக்)  தரம் பிரிக்கப்படாமல் ஒன்றாகவே ஏற்றப்படுகின்றன.
  • 4குப்பை சேகரிக்கும் வாகனம் மூடிய வாகன மாகக் காணப்படாமையால் தெருவில் செல்பவர் கள் மிகப்பெரிய அசௌகரியத்துக்கு உள்ளாகிறார்கள்.
  •   குப்பை சேகரிக்கும் வாகனப் பராமரிப்பும் திருப்திகரமாக இல்லை. அத்துடன், வாகனங்களுக் குத் தட்டுப்பாடும் காணப்படுவதால் சில நேரங் களில் தெருக்களில் குப்பைகள் நீண்ட நாள்களுக் கும் துர்நாற்றத்துடன் சேர்ந்து கிடக்கின்றன. மழைக் காலங்களில் இது பெரும் சீரழிவாகக் காணப்படுகின்றது.
  • கல்லுண்டாய்ப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் ஒழுங்கான முறையில் மண்ணால் மூடப்படாமையால் அந்தப் பிரசேதம் முழுவதும் மாசுபட்டுக் காணப்படுகிறது. பொலித்தீன் பைக ளும், குப்பைகளும் அங்குமிங்கும் பறந்து திரிவதால், அத்தெரு ஓரம் முழுவதும் இரு மருங்கிலும் பொலித்தீன் பைகளையும் கழிவுகளையும் காணக்கூடியதாக உள்ளது. இதனால் ஈயும் காகமும் தாராளமாகப் பறந்து திரி கின்றன. நாய்களும் குப்பையைக் கிளறி வீதிக்குத் தள்ளுகின்றன. அந்தப் பகுதியால் செல்லும் அனைவரும் மூக்கைச் சுழித்தவாறும் அரு வருத்தவாறுமே செல்கின்றனர். கடல் பிரதேச மாகக் காணப்படுவதால் நிலப்பரப்பு மட்டு மன்றி நீர்ப்பரப்பும் மிகப்பெரிய மாசுக்கு உட்படுகின் றது. மழைக்காலங்களில் அந்தப் பிரதேசத்தில் நீர் சேரும்போது நிலைமை மேலும் மோசமாகின்றது.
  • கழிவுகளைப் பசளையாக்கும் முயற்சியைத் தற்போது காக்கைதீவில் ஆரம்பித்திருக்கிறார் கள். ஆனாலும் அது போதிய வசதிகளுடன் திருப்திகரமாக இல்லை என்பதும் குறைபாடா கக் காணப்படுகிறது. மக்கள் இயற்கைப் பசளை யைத் தயாரிப்பதற்கான ஊக்குவிப்பை மேற் கொள்ள வேண்டும். (வெலிகம பிரதேசத்தில் பசளை தயாரிப்பிற்கான ஊக்குவிப்புகள் நடை பெறுகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்களும்  பங்காற்றுகின்றன. பாடசாலைகளுக்கு இடையே கூடப் போட்டிகள் நடத்தியும் பசளை தயாரிப்பை ஊக்குவிக்கின்றார்கள். அங்கு மக்கள் குப்பையைத் தேடித் திரிவதைக் காணக்கூடியதாக உள்ளது.)

வைத்தியசாலைக் கழிவுகள் 
 
கழிவகற்றலில் வைத்தியசாலைக் கழிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிலும் யாழ். போதனா வைத்தியசாலைக் கழிவுகள் அகற்றப் படுதலில் பெரும் குறைபாடுகள் காணப்படுகின் றன. தொற்றுக்குள்ளான சுகாதாரக் கழிவுகள் ஆபத்தானவை. அவை அவற்றுக்கான குறியீட் டுக்குரிய பைகளில் இடப்பட்டு உரிய முறை யில் அகற்றப்பட வேண்டும். ஊசிகள், நோயா ளரது இரத்தம், சலம், சளி, மலம் போன்ற கழிவு கள் உடற்பாகங்கள் , காயங்களின் சுத்திகரிப்புப் பொருள்கள், இரசாயனப் பொருள்கள், இழைய நஞ்சுக் கழிவுகள் போன்றன மிகவும் ஆபத் தானவை. இவை மிகவும் கவனமாக அகற்றப் படல் வேண்டும். இவையும் குப்பையோடு குப்பையாகக் கல்லுண்டாயில் கொட்டப்படு மானால் யாழ். மக்களுக்கு இதைவிடப் பெரிய ஆபத்து ஒன்றுமில்லை. இவற்றில் சில கழிவுகள் வைத்தியசாலையில் எரியூட்டிப் பின்னர் அகற்றப்பட்டாலும் உரிய முறையில் எரியூட்டப்படுவதில்லை என்ற குறைபாட்டைத் தவிர்க்க முடியாது.
 
வைத்தியசாலைக்கு எரிகூடம் அவசியம். ஆனால் உரிய எரிகூடம் இல்லாதது பெரும் குறையே. ஏனெனில் இந்தக் கழிவுகள் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாகை வெப்பநிலையில் எரியூட்டப்படும் பொழுதே முழுமையான அழிவுக்குள்ளாகும். இங்கோ அப்படி எதுவும் நடப்பதில்லை.எனவே, கழிவகற்றலில் இப்படியான குறைபாடுகள் காணப்படுமானால், யாழ் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகும் என்பதில் ஐயமில்லை. யாழ். மாநகர சபை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.