காதலர் தினத்தை முன்னிட்டு குருநகர் உயர்தொழில்நுட்பக்கல்லூரியில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற நடமாடும் இரத்ததான நிகழ்வின்போது 65 பேர் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர்.யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு கடந்த பல வருடங்களாக காதலர் தினத்தை முன்னிட்டு உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடமாடும் இரத்ததான முகாமை நடத்தி வருகின்றது.இதனடிப்படையில்
நேற்று அங்கு இடம் பெற்ற இரத்ததான நிகழ்வின் போது கல்லூரியின் மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என 65 பேர் இரத்ததானம் செய்துள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியினர் தெரிவித்தனர்.உயர்தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தின் அழைப்பின் பேரிலேயே இரத்ததான முகாம் ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருகிறது

