Monday, January 24, 2011

மரண அறிவித்தல்

திரு ராசன் குணரத்தினம்
தோற்றம் : 10 -02-1943   மறைவு : 24 01-2011


 சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  ராசன் குணரத்தினம் அவர்கள் 24-01-2011 திகட்கிழமை அன்று சிறுப்பிட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ராசன் பொன்னம்மா தம்பதியினரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா -  அன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
கேதீஸ்வரன்(கேதீஸ் - லண்டன்), கஜேந்திரன்(கஜன் - இலங்கை), தவரூபன்(ரூபன் - ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அதுஷன் அவர்களின் அன்பு  அப்பப்பாவும்,சத்தியகலா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நற்குணராசம்மா, காலஞ்சென்ற நவரட்ணம்மற்றும் தங்கம்மா(அன்ரா - சிறுப்பிட்டி)  அவர்களின் அன்புச் சகோதரரும்,செல்வரட்ணம்(ஓய்வுபெற்ற ஆசிரியர் - நடராஜலிங்கம் வித்தியாலயம் ( சிறுப்பிட்டி),விசாகநாதன்(சிறுப்பிட்டி) மற்றும் காலஞ்சென்ற யோகாம்பிகை மற்றும் பஞ்சநாதன்(கனடா - ஸ்காபறோ), கமலேஸ்வரி(கனடா - ஸ்காபறோ), மகேஸ்வரி(நீர்வேலி), புவனேஸ்வரி(நீர்வேலி) மற்றும் காலஞ்சென்ற விக்கினேஸ்வரி, மற்றும் மகேஸ்வரி(கனடா - ஸ்காபறோ) ஆகியோரின்  மைத்துணரும்,கிருஸ்ணபிள்ளை(நீர்வேலி), கந்தசாமி(கனடா - ஸ்காபறோ) மற்றும் காலஞ்சென்ற பரராஜசிங்கம், காலஞ்சென்ற வைரவநாதன்   ஆகியோரின் சகலனும் அன்பு  ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 26-01-2011 புதன்கிழமை இராசவீதி சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தகனக்கிரிகைகளுக்காக சிறுப்பிடடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்-
நிரோசன் [மாசிவன் சந்தி]
திவாகரன் [சிறுப்பிட்டி மேற்கு]
124

அநுராதபுரம் சிறையில் கலவரம்,
பெண் கைதி உயிரிழப்பு. 23 பேர் காயம்,
 அம்புலன்ஸ்கள் விரைவு: போராட்டத்துக்கு
 மத்தியில் நீதிமன்றக் கட்டடமும் தீப்பற்றி எரிந்தது


பிந்திய தகவலின்படி அநுராதபுரம் வைத்திய
சாலையில் 23 பேர் அனுமதிக்கப்பட்டனர்
என்றும் அவர்களில் ஒரு பெண் கைதி
உயிரிழந்ததுடன் மேலும் ஒருவரின் நிலை
கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்திய
சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள கைதிகளின் போராட்டம்
 தொடாந்து இன்றும் இடம்பெற்று வருவதாகச்
 சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
 தமக்கான அடிப்படை வசதிகளை வழங்குமாறு
 கோரியே நேற்று மாலையிலிருந்து இந்தப்
போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
சிறைச்சாலைக் கூரையின் மீது ஏறி
அமர்ந்துள்ள கைதிகள் ஆர்ப்பாட்டத்தில்
 தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தமது
 கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு
உறுதியளிக்கப்படும் வரை போராட்டம்
தொடருமென அவர்கள் தெரிவித்துள்ளதாகவும்
 அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
இதேவேளை, அநுராதபுரம் நீதவான் நீதிமன்ற
கட்டடத்தின் ஆவணப் பாதுகாப்புத் தொகுதியில்
 இன்று அதிகாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
 இதன் காரணமாக முக்கிய வழக்குகள் தொடர்பான
 ஆவணங்கள் பெருமளவில் அழிந்து விட்டதாகப்
அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அநுராதபுரம் சிறையில் கலவரம், ஒருவர் பலி
பலர் காயம், அம்புலன்ஸ்கள் விரைவு:
அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட
 அசம்பாவிதம் காரணமாக ஒருவர்
கொல்லப்பட்டதுடன்
 இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 அங்கு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே
ஒரு பெண் கைதி கொல்லபட்டாரென
அறிவிக்கப்படுகிறது.
இதேவேளை, படுகாயமடைந்த நால்வர் சற்று நேரத்துக்கு
முன்னர் அநுராதபுரம் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர் என அநுராதபுரம்
வைத்தியசாலை வட்டாரங்கள் சற்று
நேரத்துக்கு முன்னர் தெரிவித்தன
. இவர்களில் ஒருவர் சிறை அதிகாரி. ஏனைய
மூவரும் சிறைக் கைதிகளாவர்.
இதேவேளை, அநுராதபுரம் வைத்தியசாலையைச்
 சேர்ந்த ஆறு அம்புலன்;ஸ் வண்டிகள் சிறைச்
சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனவென்றும்
அந்த வட்டாரங்கள் கூறின. அநுராதபுரம் சிறை
ச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள்
 நேற்று மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு
 வருகின்றமை தெரிந்ததே. தமக்கான அடிப்படை
வசதிகள் வழங்கப்பட வேண்டுமெனக் கோரியே
சிறைச்சாலையின் கூரை மேலேறி இவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்