Friday, February 11, 2011

யாழ்ப்பாணத்தில் அனைத்து குடும்பங்களையும் பதிவு செய்யுமாறு இராணுவம் உத்தரவு
 
யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்துக் கிராம அலுவலர்களும் புகைப்படத்துடன் குடும்ப விபரங்களைப் பதிவு செய்ய வேண்டுமென 512 ஆவது இராணுவப்பிரிவின் கட்டளைத் தளபதி கிராம அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை மத்திய கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாண கிராம அலுவலர்களுடனான கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு கருதி அனைத்துக் கிராம அலுவலர்களும் தத்தமது பிரிவுகளில் உள்ள குடும்பங்களின் முழு விபரங்களையும் புகைப்படத்துடன் பதிவுகளை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இராணுவம் இரவு வேளைகளில் வீடு வீடாக சென்று குடும்பப்பதிவு அட்டைகளை காட்டுமாறு கடும் உத்தரவு பிறப்பிக்கின்றனர்.
இதேவேளை யாழ். குடாநாடு உட்பட வட பகுதிகளில் மீண்டும் மேற்கொள்ளப்பட்டுவரும் குடும்ப விபரப் பதிவுகள் நிறுத்தப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காதல் ஒரு இனிய சுகம்


உனக்கும் நட்சத்திரத்திற்கும்
என்ன வித்தியாசம்.
உன்னை கண்டதும்.
நான் கண்ட கனவு
நினைவாகிப் போயின.

நீயும் நானும்
இப்படியே இருப்பதென்றால்
நம்மிடம் இருக்கும்
வேண்டாத விடயங்ளை
மாற்ற வேண்டும்

நீயும் நானும் சந்திப்பது
காதல் அல்ல
இருவரும் ஒரே பாதையில்
தேடிப்போவதுதான்
காதல்.

நீ.. அருகில்
இருந்தும்
எனக்கு இல்லாததுபோல்.
உள்ளது.
உனக்காக.. என்னை மாற்றியது
நான் செய்த தவறு என்று
புரிந்து கொண்டேன்

உன்னை பாராமலும்
உன்னை சேராமலும்
இருக்கும் போதே..
என் இதயத்தை தொலைத்து
விட்டேன்.உன்னிடம்


இலங்கைத் தமிழர்கள் உட்பட 97 பேருடன் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற இரு படகுகளை ஆஸ்திரேலியக் கடற்படையினர் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே மடக்கிப் பிடித்தனர்.ஒரு படகில் 53 பயணிகளும் இரு சிப்பந்திகளும் இருந்தனர். அடுத்த படகில் 40 பயணிகளும் நான்கு சிப்பந்திகளும் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


கிறிஸ்மஸ் தீவுக்கருகே கடலில் இந்த இரு படகுகளும் சென்றுகொண்டிருந்தபோது ஹிமாஸ் மைற்லண்ட் என்ற கடற்படைக்குச் சொந்தமான கப்பல் இவ்விரு படகுகளையும் கண்டுபிடித்தது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவிலுள்ள முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது