எம்.வி. சன் ஸீ அகதிகள் கப்பலின் பிரதான சந்தேக நபர் உட்பட ஏழுபேர் தாய்லாந்தில் கைது
கனடாவுக்கு 492 இலங்கைத் தமிழ் குடியேற்ற வாசிகளை ஏற்றிச் சென்ற எம்.வி. சன் ஸீ கப்பல் பயணத்துடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவரை தாம் கைதுசெய்திருப்பதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதான நடேசன் ஜீயநந்தன் என்பவரையும் மேலும் 7 பேரையும் கடந்த ஞாயிறன்று மேற் கொள்ளப்பட்ட முற்றுகையொன்றின்போது கைது செய்ததாக தாய்லாந்து குடியேற்றத்துறை பொலிஸார் கூறியுள்ளனர். |
கடந்த பெப்ரவரி மாதம் 200 இலங்கையர்களை ஏற்றிச்செல்ல தயாரானபோது வழிமறிக்கப்பட்ட கப்பலொன்றின் பின்னணியில் ஜீயநந்தன் செயற்பட்டதாக தாய்லாந்து அதிகாரியொருவர் கூறியுள்ளார் . எனினும் கனேடிய அதிகாரி யொருவர் இது தொடர்பாக கூறுகையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிக்கு எம்.வி.சன் ஸீ கப்பலை அனுப்பு வதற்கு இவர் உதவினாலும் பிரதான ஏற்பாட்டாளர் அவரல்ல எனத் தெரிவித்துள்ளார். ஏனைய கப்பல்கள் மூலம் குடியேற்ற வாசிகளை கனடாவுக்கு அனுப்பும் மனிதக் கடத்தல் பாரிய நடவடிக்கைகளின் பின்னாலிருந்தவர் என மேற்படி அதிகாரி கூறியுள்ளார் 124 |

