Sunday, April 24, 2011

மேலும் ஒரு அகதிக் கப்பல் அவுஸ்திரேலியாவை நோக்கி

அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று அவுஸ்திரேலியாவின் கடல் எல்லையை அடைந்துள்ளதாக அவுஸ்திரேலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கும் � அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான கொகோஸ் தீவுகளின் கடற்கரையை இந்த படகு அடைந்துள்ளது. படகில் 81 பயணிகளும், படகோட்டிகளும் காணப்படுவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தற்போது அவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 600 மக்களை கொண்ட கொக்கோஸ் தீவுகளில் அகதிகளை பாராமரிப்பது மிகவும் கடினமானது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்,,,,,,,,,,,,