Wednesday, February 9, 2011

நீர்வேலியில் வாழைப்பழத்தின் விலையில் வீழ்ச்சி



நீர்வேலியில் வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கதலிப் பழம் கிலோ 10 ரூபா தொடக்கம் 25 ரூபா வரையிலும்
 இதரைப் பழம் கிலோ 20 ரூபாவாகவும் வியாபாரிகளாhல் கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

 இதே வேளை கடைகளில் கிலோவுக்குப் 20 ரூபா வைத்து விற்கப்படுவதாகவும் அவர் கூறினார். தென்பகுதிய வியாபாரிகளின் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டதாலேயே இந்நிலைமை காணப்படுகின்றது.


வாழைப்பழக் கடைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தள்ளுவண்டி வியாபாரமும் படிப்படியாக குறைந்து வருகிறது.

றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை

நீர்வேலி றோ.க. பாடசாலையின் மெய்வல்லுநர் போட்டி
 
நீர்வேலி றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையின் மெய்வல்லுநர் போட்டி 11.02.2011 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அதிபர் சி.தர்மரத்தினம் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
 
 
 இந்நிகழ்வில்
 
 பிரதம விருந்தினராக ம.பிரதீபனும்
 
சிறப்பு விருந்தினர் க.குணாளன்,
 
கௌரவ விருந்தின பழைய மாணவரும்
 
 ப. பரமேஸ்வரனும்
 
 
போட்டியில் கலந்துகொள்வதைவிட்டு மகிழ்ச்சி வெளியிட்டதுடன், கல்லூரி மாணவர்கள், மாணவர்களாக மட்டுமன்றி, எதிர்கால சமூகத்துக்கான சேவையை வழங்குபவர்களாக உயரவேண்டும் என்று வாழ்த்திச் சென்றார்.

றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை

நீர்வேலி வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களின் மரதன் ஓட்டப்போட்டி சென்ற சனிக்கிழமை இடம்பெற்றது. பொறியியலாளரும் பழைய மாணவருமாகிய த.ஜெகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பெற்ற இப்போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக கலந்து கொண்ட அத்தனை மாணவர்களும் மரதன் ஓட்டப் பாதையை முழுமையாக ஓடி முடித்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் முயற்சியைக் கண்ட நீர்வெலி வடக்கு இளைஞர்கள் தாமே முன்வந்து போட்டியில் கலந்து கொண்ட எல்லோருக்கும் பரிசு என்று அறிவித்திருக்கிறார்கள்..