Friday, April 29, 2011

யாழில் மே தினத்தை துக்க தினமான அனுஷ்டிக்க யாழ்.மாவட்ட கடற் தொழிலாளர்கள் தீர்மானம்

யாழில் மே தினத்தை துக்க தினமான அனுஷ்டிக்க யாழ்.மாவட்ட கடற் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் எஸ்.தவரெட்ணம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


மேலும், வடமாகாண கடற் தொழிலாளர்களுடைய பிரச்சினைகளுக்கு எந்த விதமான தீர்வுகளும் கிடைக்காமையினால் தங்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும். எமது வடகடல் வளங்கள் இதுவரை பாதுகாக்கப்படவில்லை எமது கடற் தொழிலாளர்கள் கடலில் மீன்பிடிக்க முடியாத நிலைகள் சில பிரதேசங்களில் காணப்டுகிறது.



இந்திய மீனவர்களுடைய அத்து மீறிய மீன்பிடிப்புக்கு இதுவரை எந்தவித ஆக்கபுர்வமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. எமது கடல் தொழில் சமூகத்திற்கு அவர்களின் கடல் உபகரண அழவுகளுக்கு இது வரை எந்த விதமான நட்டஈடுகளும் வழங்கப்படவில்லை இதனாலே தங்கள் மே தினத்தை துக்க தினமாக அனுஸ்டிக்கவுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது