Wednesday, January 12, 2011

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

 இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று சொன்னால் சில பேர் கேட்கும் கேள்வி இதுதான் அந்த பணத்தை எப்படி பெறுவது?சரி இன்றைய பதிவை இதுவாகவே எடுத்து கொள்வோம்.
முதலில் உங்களுடைய பெயரில் ஒரு வங்கி கணக்கை ஆரம்பிக்கவும்.

பின்னர்
www.paypal.com சென்று உங்கள் வங்கி விபரங்களை கொடுத்து பதிவு செய்து செய்து கொள்ளுங்கள்.
அவர்கள் உங்கள் வங்கி கணக்கு பேனப்படும் இடத்திற்கு இரகசிய இலக்கத்தை 2 அல்லது 3 நாட்களுக்குல் அனுப்பி விடுவார்கள்,நீங்கள் உங்கள் வங்கி மூலம் தொடர்பு கொண்டு அந்த இலக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும். paypal சென்று உங்கள் கணக்கை செயற்படுத்திக்கொள்ளுங்கள்.

இனி நீங்கள் பணம் சம்பாதிக்க செல்லும் தளம் எல்லாம் paypal email  கேட்பார்கள் அதற்கு உங்களுடைய paypal email id ஐ கொடுக்கவும்.இனி நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் உங்கள் வங்கிக்கு அனுப்பி விடுவார்கள் நீங்கள் சென்று உங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.அடுத்த பதிவில் பணம் தரும் தளத்தைப்பற்றி பார்ப்போம்.
 
124
கல்லூரிபருவமது
கன்னியவள் வாழ்க்கையிலே
கானல் நீராய் போனதுவோ
கற்பனைகள் பல கொண்டு
கட்டிச் சென்ற காதல் கோட்.டை
பள்ளி பருவமது துள்ளியே
சென்றுவிடும் என்பதினால்
தள்ளியே வைத்திருந்தால்
தன் காதல் சிந்தனையை.

கல்லூரி காலமதில்
காளையர்கள் கற்கும் வித்தைகளில்
காதலும் ஒன்று என்றதினால் - அது
கற்பதற்கு மட்டுமா? அல்ல
கடந்து செல்ல உதுவுமா?
கலகத்திலே அதை
கடந்தே வந்துவிட்டாள்
கடந்துவந்த பாதைகளில்
கண்ட பல காட்சிகளில்
நின்று அவள் ரசித்ததினால் - தன்
நிகழ்கால வாழ்வினிலே
நிபதந்தைகள் பல கொண்ட
நிச்சயத்தினை தான் எடுத்தால்
கை நிறைய பணம் வேண்டாம்
கள்ளத்தனம் வேண்டாம்
சிந்தனையைச் செயலாக்கி
செலவுகளை சிறிதாக்கி
தன்னிலை தான் அறிந்து
தர்மவழி செல்பவனே
தன் வாழ்க்கைத் துணைவன் என
அவள் தரணியெல்லாம் தேடுகின்றாள்

வெள்ளத்தில் தத்தளித்து
வள்ளத்தில் வந்த இவள்
உள்ள தாகத்திற்காய்
பள்ளத்தில் தேடுகின்றாள்
தெள்ளத் தெளித்த தண்ணீர்
ஆனால் அங்கே
தேங்கியே நின்றின்றது
தப்புத் தண்ணீர் 
124
உண்மை நட்பு

 சுற்றுகின்ற பூமியிலே
சுற்றத்தார் சூழ இருந்தும்
சொந்தங்கள் பலவிருந்தும்
சோகம் சொல்லி சுகம் அறிய
உயிர் அழைக்கிறதே
உற்ற துணை ஒன்றை
அதன் பெயர் தான் நட்பா?

பக்கத்து வீட்டாருடன்
பலகாரம் பரிமாரி
பல காலம் பழகியதால்
உருவானது தான் நட்பா?

பள்ளி பருவமதில்
படிப்பதற்கு மட்டுமன்றி
பல கள்ளத்தனம் செய்ய
பாங்காளி என்ற பெயரில்
பக்கபலமாய் இருப்பதுதான் நட்பா?

பல்கலை புகுந்தவுடன்
பகிடிவதை என்ற பெயரில்
பகட்டாய் பல கதைபேசி
பல முகங்கள் இங்கே
இணைவதுதான் நட்பா?

காலம்மாறி போகையிலும்
பஸ் பயணத்தின் போதிலும்
பகல் திருவிழாவிலும்
பக்கத்தில் இருந்தனால்
ஆனாதுதான் நட்பா?

கடிதத்தில் ஆரம்பித்து
கைபேசியில் கலந்து பேசி
கணனியிலே கண் பார்த்து
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
கதை பேசி மகிழ்ந்ததனால்
மலர்ந்ததுதான் நட்பா?

காரணங்கள் பல கூறி
கலந்த பல உள்ளங்கள்
நட்பு என்னும் காவியத்தில்
இணையுது இங்கே - அதற்கு
வரையறை இல்லாது
வகுக்குதுவே இலக்கணங்கள்
சாதி மதம் பார்க்காமல்
சந்தர்ப்பம் பார்க்காமல்
தேவையென்று அறிந்ததுமே
தேடியே வந்துதவி
துன்பம் ஒன்று வருகையிலே
தோழோடு தோள் கொடுத்து
உறுதியுடன் இறுதிவரை போராடி
உறுதிமொழி பல கொடுத்து
உற்ற துணை தான் இருந்து - இவ்
உலகம் உள்ள வரை
உண்மை நட்பு
உயிர் வாழ்ந்திடுமே..

to-raju124

பிறப்பு : 16 ஏப்ரல் 1981 — இறப்பு : 30 நவம்பர் 2010
யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மயூரன் அவர்கள் 30 .11 .2010 செவ்வாய்க்கிழமை  அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை நாகேஸ்வரி அம்மா அவர்களின்  அன்பு  மகனும்,
சத்தியகுமாரி அவர்களின் அருமை  கணவரும்,
ரதிபன், கஜிசன், கபிசா, தனுசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயலக்சுமி, விஜயநந்தினி, செந்தில்நாதன்(செந்தில்- கனடா), வரதராஜன்(ராஜன்-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
தயாகரன்(பஞ்சன்), வசந்தகுமார்(கொழும்பு), ஜெயரூபி(ஜெயா-கனடா), கலைமதி(மதி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவானி, சாமினி, தர்ஷா, மதுசாயி ஆகியோரின் மாமனாரும்,
சகிரா, கார்த்திகா, கார்த்தேபன், ஆதித்தன், அபிஷா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 02 .12 . 2010 வியாழக்கிழமை  அன்று அவரது  இல்லத்தில் நடைபெறும்.
இவ்  அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் -Anoraj
நீர்வேலி வடக்கு ஸ்ரீ காமாட்சியம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம
நீர்வேலி வடக்கு குறுக்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சியம்பாள் ஆலய
வருடாந்த அலங்கார உற்சவம் நாளை மறுதினம் 08.01.2011 சனிக்கிழமை ஆரம்பமாகி
தைப்புனர்பூச நன்நாளாகிய 19.01.2011 வரை பன்னிரு தினங்கள் மிகச்சிறப்பாக
நடைபெறவுள்ளது 
.124