இன்று காலை வடமராட்சிக் கிழக்கு, முல்லைத்தீவு போன்ற கரையோரப் பகுதி மக்கள் மீது படையினர் கோவமாக நடந்துகொண்டதோடு, மக்கள் அனைவரையும் பொதுமைதானத்தில் நிறுத்தி வீடுவீடாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மக்களையும் சோதனைக்குள்ளாக்கி மிகவும் சிரமப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இச் சோதனைக்கு அடிப்படையான காரணம் உடுத்துறைக் கடலில் மர்மமான படகு கண்டுபிடிக்கப்பட்டமையே ஆகும்.
இச்சர்சைக்குரிய படகை படையினர் தமக்கு நெருக்கமான இளைஞர்கள் சிலருக்குக் காண்பித்துள்ளனராம்.
குறித்த படகில் துப்பாக்கி பொருத்துவதற்கான ஒரு பகுதி காணப்படுவதாகவும் மெலிதான் சாம்பல் நிறத்திலான அந்தப்படகில் துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக் குண்டுகள் படகிலிருந்து அகற்றப்படாமலிருப்பாதாகவும் படகை நேரில் பார்த்த இளைஞர்கள் தெரிவித்துள்ளர்.
மேலும் படகில் ரவைகள் காணப்படுவதனால் அதற்கான துப்பாக்கியும் இருந்திருக்க வேண்டும் என்றே அவர்கள் மேலும் சந்தேகிக்கின்றனர்.
இதனாலேயே இன்று காலை பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் இச்சோதனை நடந்தது.
இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மக்களின் பாதுகாப்புக் கருதி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் படையினர் தெரிவித்துள்ளதோடு, மர்மப் படகு உடுத்துறைக் கடற்கரையில் படையினரின் காவலோடு கட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, முல்லைக் கடலில் காணாமல் போன நால்வர் கொண்ட கடற்படை அணிக்கும் இம்மர்மப் படகிற்கும் சம்பந்தம் இருக்கலாம் என சோதானை மேற்கொண்ட படையினர் அச்சம் அடைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.