| அகதி முகாம்களிலிருந்த மக்கள் அண்மையில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட உடுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் படைத்தரப்பு பெரும் எடுப்பிலான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. |
| ஆயிரக் கணக்கில் படையினர் குவிக்கப்பட் டுள்ளனர். பொதுமக்கள் உள்ளேயோ வெளி யேயோ செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவி ல்லை. வீடுகள் தோறும் படையினர் தமது பதிவுகளை சரி பார்த்த வண்ணம் இருக்கின்றனர் என குளோபல் தமிழ்ச் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அண்மையில் குடியேறிய வடமராட்சியின் உடுத்துறையிலும் முல்லை த்தீவின் சில பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் இந்தத் தேடுதல்கள் இடம்பெறுகின்றன. ராணுவப் பவர் கவச வாகனங்கள் சகிதம் ஆயிரக் கணக்கில் படையினர் அதிகாலை முதல் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களே இந்த சுற்றிவளைப்பு தேடுதல்களை நடத்தி வருகின்றனர். கடற்கரை மற்றும் அதனை அண்டிய கிராமங்களை உள்ளடக்கி இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதென தெரிவிக்க்ப்பட்டுள்ளது. அண்மையில் வெளியே மீனவர்களின் படகொன்றினை பெற்று கடலுக்குச் சென்ற சிலர் மீளத் திரும்பியிருக்காத நிலையில் அவர்களைத் தேடி இந்த தேடுதல்கள் இடம்பெறலாம் எனவும் அப்பகுதி மீனவ அமைப்புகள் சந்தேகம் கொண்டுள்ளன. எனினும் படையினர் பொதுமக்களின் வீடகளை இலக்கு வைத்து தேடுவதால் தேடுதல் நோக்கம் வேறாக இருக்கலாம் எனவும் திசை திருப்பும் வகையில் இவ்வாறு தகவல்களை கசிய விட்டிருக்கலாம் என சில அவதானிகள் கூறுகின்றனர். வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் இத்தேடுதல்கள் இடம்பெறுவதை அப்பகுதி மீனவ அமைப்பு உறுதிப்படுதியது. எனினும் முல்லைத்தீவின் எப்பகுதிகளில் சோதனை நடவடிக்கை இடம்பெறுகின்றன என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகியி ருக்கவில்லை. எனினும் முல்லைத்தீவுப் பகுதியிலும் இதேபோன்று படையினர் பெரும் எடுப்பில் குவிக்கப்பட்டு சோதனைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன,,,,,,,,,,,,,, |
Thursday, March 31, 2011
வடமராட்சியின் இராணுவம் குவிக்கப்பட்டுத் திடீர் தேடுதல்
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment