நேற்று யாழ். நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் பல லட்சம் பெறுமதியான உடுபுடவைகள் எரிந்து பாரிய சேதம் ஏற்பட்டமைக்கு தீயணைப்புப் படையினரும் ஒரு காரணம் என அப்பகுதி வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுளனர்.
நேற்று இரவு 7.10 மணியளவில் யாழ். முனீஸ்வரன் வீதியில் அமைந்துள்ள நடைபாதை வியாபாரக் கடைத்தொகுதியில் ஏற்பட்ட நாசகரத் தீவிபத்து என்று கூறப்படும் சம்பவத்தில் இரண்டு கடைகள் முற்றாக அழிவடைந்துள்ளதுடன் ஒரு கடை பகுதிச் சேதத்துக்குள்ளாகியிருந்தது.
இச் சம்பவத்தில் சுமார் 1 கோடியே 30 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து அழிவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளையில் இச்சம்பவம் குறித்து அங்கிருந்த வர்த்தகர்கள், தீ பரவ முன்னர் உடனடியாக யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிற்கு தொலைபேசியின் மூலம் முறைப்பாடு செய்ய தொடர்பு கொண்ட போது அவர்கள் பதிலளிக்காத நிலையில் மாநகர சபையினரை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றிக் கூறியுள்ளனர்.
அவர்களும் சுமார் ஒன்றரை மணி நேரத்தின் பின்னரே சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அவர்கள் தமது தீயணைக்கும் நீர் பாய்ச்சும் இயந்திரத்தினை இயக்க முற்பட்ட போது அதில் எரிபொருள் இல்லாத நிலையில் தாங்கள் அதற்குரிய எரிபொருளை கொடுத்ததாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில், தீயணைப்புப் படையினர் உரிய நேரத்தில் விரைந்திருந்தால் சிறிதளவு பாதிப்பே ஏற்பட்டிருக்கும் என்றனர்.
தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்னரே படையினரும் மக்களும் இணைந்து அருகில் புல்லுக்குளத்தில் இருந்த நீரைப் பயன்படுத்தி தீயை அணைத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment