Sunday, January 23, 2011

பச்சை மிளகாய் ரூ.700

எகிறும் மரக்கறி விலை பச்சை மிளகாய் ரூ.700


மரக்கறி வகைகளின் விலை முன்னெப்போதும் இல்லா தவாறு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. கடும் மழை காரணமாக மிளகாய்ச் செய்கை கடும் பாதிப்புக்குள்ளா னதால், பச்சை மிளகாய் சந்தைக்கு வருவது மிகவும் குறைந் துள்ளதாக தம்புல்ல பொருளாதார நிலைய வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறி வகைகள் அனைத்தும் நூறு ரூபாவுக்கு அதிக மாகவே விற்பனையாகின்றன. கோவா ஒரு கிலோ நூறு ரூபா வாகவும், கறி மிளகாய் 260 ரூபாவாகவும், கரட் 180 ரூபாவாகவும், போஞ்சி 160 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மரக்கறி விவசாயிகளுக்கு அரசு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை. மாறாக வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்துவதாக மரக்கறி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தகவல்-  அனோராஜ்
                       [124]

சிறுவயதுப் பிச்சைக்காரர்

யாழில் தற்போது சிறுவயதுப் பிச்சைக்காரர்

தற்போது சிறுவயதுப் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் காணப்படுகின்றது.



யாழ் பேருந்துகளில் தம்மைப் பற்றிய துயரமான அறிமுகத்துடன் கூடிய துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த பின்பு அழகாக பாடி முடித்து விட்டு பயணிகள், மக்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிச் செல்கின்றனர் ஆனால் இப்பணம் இவர்களுக்கு உண்மையில் பயன்படுகின்றதா? அல்லது வேறுகும்பல்களுக்கு போய்ச் சேர்கின்றதா? என்பதில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது. கொழும்பில் பஸ்களில் பிட்சைக்காரர்களுக்கு தடை விதித்த உடன் அப்பிட்ச்சைகாரர்கள் யாழில் சிறு பிள்ளைகளை வைத்து தொழிலாக செய்கின்றனரா என்ற சந்தேகமும் எழத்தான் செய்கின்றது எது எப்படியிருப்பினும் குழந்தைத் தொழிலாளர்களை பாதுகாத்து உரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக உதவும் பொறுப்பில் உரியதரப்பினர் அக்கறை செலுத்த வேண்டும்.

மக்களோ கொழும்பில் விரட்ட எல்லோரும் யாழ் வந்துவிட்டார்கள் போல என முணு முணுக்கின்றனர்.

தகவல்- அனோராஜ்[124]

நிலவெடிப்பு சம்பவம்

திருமலை. குச்சவெளி பிரதேசத்தில் பாரிய நிலவெடிப்பு சம்பவம்
 
 
திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இன்று அதிகாலை நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி, கலப்பையாறு சுனாமி வீடமைப்பு திட்டத்துக்கு பின்னால் அமைந்துள்ள களப்பு பகுதிலேயே இச்சம்பவம் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

அப்பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தினை காணச்செல்லும் மக்கள் கூட்டம் அதிகரித்து
வருவதனால் குறித்த பிரதேசத்திற்குள் பொதுமக்கள்
 பிரவேசிக்காதவாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பில் ஆராய்வதற்காக
 கொழும்பிலிருந்து அனர்த்த முகாமைத்துவ
 நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர்
திருகோணமலைக்குப் பயணமாகியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தினால் பிரதேச மக்கள் ஒருசிலர் நகரப்
 பகுதிகளில் உள்ள தங்கள் உறவினர்களது வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...

வாரணம் .fm

வாரணம் எவ் எம்


வாரணம் எவ் எம் இன் ஒலிபரப்பாளர் மற்றும் இதழியல் டிப்ளோமா ௧ற்கைநெறிக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று (23.01.2011) யாழ்ப்பாண கலையகத்தில் நடைபெற்றது. டிப்ளோமா சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் பணிப்பாளருடன்.....
124