கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் இடப்பெயர்வு. நிலைமைகளை பார்வையிட்டார் சிவசக்திஆனந்தன்
வவுனியாவில் நேற்று முதல் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால் வவுனியா மாவட்டத்திலுள்ள குளங்கள் அனைத்தும் நீர்நிரம்பி வான்கதவுகள் திறந்துவிடப்பட்டு தண்ணீர் வழிந்தோடுவதால் பெரும்பாலான கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளினுள்ளும் தண்ணீர்புகுந்துள்ளது. இப்பகுதி மக்கள் மீண்டும் ஒரு இடப்பெயர்வைச் சந்தித்துள்ளனர். சிலகுளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளதாக வவுனியாவில் இருந்து எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


