Thursday, March 17, 2011

20 வருடகால இடைவெளியின் பின் சுபாஸ் விடுதி அதன் உரிமையாளரிடம்

சுமார் 20 வருடகால இடைவெளியின் பின் சுபாஸ் விடுதி அதன் உரிமையாளரையே இன்று சென்றடைந்தது. 1987 களில் இந்திய ராணுவத்துடன் சேர்ந்தியங்கிய ஈபீஆர்எல்எவ்வின் கட்டுப்பாட்டில் சுபாஸ் விடுதி இருந்தது. 1990 காலப்பகுதியில் கோட்டைப்பகுதியில் இடம்பெற்ற மோதலை அடுத்து கோட்டை புலிகளிடம் வீழ்ச்சி கண்டபின் சுபாஸ் விடுதியும் புலிகளின் வசமானது.
 
இந்த சம்பவங்களை அடுத்து அதன் உரிமையாளரான கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்ட சுபாஸ் குடும்பத்தினர் வெளியேறிச் சென்றனர். 1995 காலப்பகுதியில் படையினரிடம் யாழ்ப்பாணம் வீழ்ச்சி அடைந்த பின் சுபாஸ் விடுதி 512 ஆம் படைப்பிரிவின் தலைமையகமாகவும் கைது செய்யப்படும் இளைஞர் யுவதிகள் சித்திரவதை செய்யப்படும் இடமாகவும் விளங்கியது.
 
எனினும் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட பின் யாழ் நகரப்பகுதியில் இருந்து படையினர் படிப்படியாக வெளியேறி வரும் நிலையில் சுபாஸ் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறிய படையினர் அதனை இன்று உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். 
 
 
இதன் தொடர்ச்சியாக 20 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த விக்டோரியா வீதியும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
 

தகவல்,,,,,,,,மாசுவன் இணையம்   124