Friday, April 8, 2011

தனியார் வகுப்பிற்கு சென்ற கொடிகாமத்தைச் சேர்ந்த யுவதி காணாமல்ப்போயுள்ளார்



யாழ்ப்பாணம் தென்மராட்சியில் 17 யுவதி ஒருவர் கடந்த 3ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை மைத்ரேஜி என்ற 17 வயதுடைய யுவதியே காணாமல் போயுள்ளவராவார்.  

   
தங்களது மகள் கடந்த 3ஆம் திகதி தனியார் சென்றதாகவும் இதுவரை
 வீடு திரும்பவில்லை என குறித்த யுவதியின் பெற்றோர் கொடிகாமம் 
 பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்துள்ளனர்.  கொடிகாமம்  பொலிஸார் குறித்த யுவதியின்
புகைப்படத்தைக் காட்டி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.