Thursday, January 27, 2011

முதலாவது தேர்தல் வன்முறையை துப்பாக்கி

 வேட்டுகளுடன் இன்று ஆரம்பித்து வைத்த பிரதியமைச்சரின் ஆதரவாளர்கள்

இந்தச் சம்பவம் இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தைப் பகுதியில் இடம்பெற்றது.

இலங்கையில் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், முதலாவது தேர்தல் வன்முறையை பிரதியமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் இன்று காலையில் ஆரம்பித்து வைத்துள்ளனர். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதித் தினமான இன்று இரத்தினபுரியிலேயே முதலாவது தேர்தல் வன்முறைச் சம்பவம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது


இரத்தினபுரி மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலால் ஜயக்கொடி என்பவரின் தலைமையிலான சுயேட்சைக் குழு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையிலும் மின்சக்தி, எரி சக்தி பிரதியமைச்சர் பிரேம்லால் ஜயக்கொடியின் ஆதரவாளர்களுக்குமிடையே இன்று காலையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.


இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்


பிரதியமைச்சரின் இரு வாகனங்களும் இந்தச் சம்பவத்தில் பலத்த சேதத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்படுகிறது.

124


யாழ்ப்பாணத்தில் கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் ஒன்பது பேர் கைது

கோப்பாயில் கைதான ஒருவரே எட்பேரை காட்டித்தந்ததாக பாதுகாப்பு படையதிகாரி தெரிவிப்பு


யாழ்ப்பாணத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுக்களின் 9 சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இராணுவ பேச்சாளர் மேஜர் ஜனரரால் உபய மெதவெல இதனை தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் இந்த குழுவின் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஏனைய எட்டு சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.


இதனை அடுத்து கோப்பாய் பிரதேசத்தில் இராணுவத்தினரும், காவற்துறையினரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, அவர்கள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை நிகழ்ச்சிகள்

நமது ஊரில் இருக்கும் நம் மழலை செல்வங்களுக்காக ஒரு  பாடசாலை
நீர்வேலி றோ.க.த.க.பாடசாலை
கால்கோள் விழா
 


 
 
வரவேற்பு நடனம் – ஆரம்ப பிரிவு மாணவர்கள்

 தலைவர்  -   சி.தர்மரத்தினம் [
பாடசாளை அதிபர்]
 
கௌரவ விருந்தினர்- தி.பரராஜசிங்கம் [JP],  
 
                         -கு.தியாகராஜக்குருக்கள்   [மணிஐயா]
 
  பிரதம விருந்தினர்-S.குகதாஸ் [பிரதேச செயலகம்]

சிறப்பு விருந்தினர்- ச.லலீசன் கலந்து சிறப்பித்தார்
 
ஆசிரியர்களும்,பெற்றோர்,பிள்ளைகள் விழாத் தொடர்பான படங்கள் உள்ளன
 தி.பரராஜசிங்கம் [JP],  சிறப்புரை
 
நீர்வேலிப் பிரதேசத்தில் வழமைபோல அதிகளவான மாணவர்கள் (30 இற்கும் மேற்பட்டோர்)  தரம் 01 வகுப்பிற்கு அனுமதியைப் பெற்றுள்ளனர்
எமது பாடசாலை மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையிலும், க.பொ.த (சா/த) பரீட்சையிலும் சிறந்த பெறு பேறுகளைப் பெற்று படசாலைக்கும், ஊருக்கும்; நன்மதிப்பையும், புகழையும் பெற்றுத் தந்துள்ளனர் என்பதனையும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்


தங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி பாடசலைச் சமூகம் (அதிபர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள்)

தகவல்-தி.பரராஜசிங்கம்
124