Thursday, January 27, 2011

முதலாவது தேர்தல் வன்முறையை துப்பாக்கி

 வேட்டுகளுடன் இன்று ஆரம்பித்து வைத்த பிரதியமைச்சரின் ஆதரவாளர்கள்

இந்தச் சம்பவம் இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தைப் பகுதியில் இடம்பெற்றது.

இலங்கையில் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், முதலாவது தேர்தல் வன்முறையை பிரதியமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் இன்று காலையில் ஆரம்பித்து வைத்துள்ளனர். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதித் தினமான இன்று இரத்தினபுரியிலேயே முதலாவது தேர்தல் வன்முறைச் சம்பவம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது


இரத்தினபுரி மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலால் ஜயக்கொடி என்பவரின் தலைமையிலான சுயேட்சைக் குழு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையிலும் மின்சக்தி, எரி சக்தி பிரதியமைச்சர் பிரேம்லால் ஜயக்கொடியின் ஆதரவாளர்களுக்குமிடையே இன்று காலையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.


இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்


பிரதியமைச்சரின் இரு வாகனங்களும் இந்தச் சம்பவத்தில் பலத்த சேதத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்படுகிறது.

124


No comments:

Post a Comment