Tuesday, March 8, 2011

கந்தையா சின்னத்துரை நேற்று (07.03.2011) திங்கட்கிழமை காலமானார்.

மாவிட்டபுரம், கீரிமலை வீதியைப் பிறப்பிடமாகவும், மாசிவன், நீர்வேலி மேற்கை தற்போது வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்துரை நேற்று (07.03.2011) திங்கட்கிழமை காலமானார்.



அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா நாமுத்து தம்பதியரின் புதல்வரும் கந்தையா சீதேவன்பிள்ளையின் மருமகனும் சின்னத்தங்கச்சியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற தங்கம் (மாவிட்டபுரம்) மற்றும்
 
 நடராசா (மாவிட்டபுரம்), சுப்பிரமணியம் (மாவிட்டபுரம்) ஆகியோரின் சகோதரனும் காலஞ்சென்றவர் களான அம்பலப்பிள்ளை, முருகுப்பிள்ளை மற்றும் வேலாயுதம் (நீர்வேலி), அருளம்மா (நீர்வேலி), குணரத்தினம் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
 
 பாலச்சந்திரன் (சுவிஸ்), முகுந்தன் (சுவிஸ்),  வர்சினி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், இராஜேஸ்வரி (சுவிஸ்), ஜெலானா (சுவிஸ்), கருணதாஸ் (கனடா) ஆகியோரின் மாமனும் பவித், திலக்ஷன் (சுவிஸ்), லைலா, ஆகாஷ் (சுவிஸ்), அஸ்வின், அஸ்வியா (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  இன்று (09.03.2011) புதன்கிழமை நண்பகல் 1மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று
 
 பூதவுடல் தகனக்கிரியைக்காக  மாசுவன் இந்து மயானத்துக்கு எடுத்துச்
செல்லப்படும்.
 
 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்  
 
தகவல்-குடும்பத்தினர்
மாசுவன் இணையம்

துப்பாக்கிச் சூடு பாடசாலை மாணவன் படுகாயம்

யாழ. தொண்டமானாறு பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத் தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய வீதியில் இரணுவ வீரர ஒருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளான இளைஞர் அரியரட்ணம் அருள்தாஸ் என அவரது பெற்றோர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

கடைக்குச் செல்வதாக தமது மகன் கூறிச் சென்றதாகவும் சிறிது நேரத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகி உள்ளதாக பொதுமக்கள் தமக்கு கூறியதனை அடுத்து அங்கு சென்ற போது அருள்தாஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி காயம் அடைந்த நிலையில் வீதியில் விழுந்து கிடந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞரும் படைச் சிப்பாயும் துப்பாக்கியைப் பிடித்தவாறு இழுபறிப் பட்டதாகக அதனைப் பாரத்த சிலர் கூறியுள்ளனர் எனத் தெரியவருகிறது. எனினும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பதனை உடனடியாக அறிய முடியவில்லை.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை எழுதியபின் பரீட்சை முடிவுகளுக்காக பார்த்திருந்த 17 வயதுடைய மாணவரே அருள்தாஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது