Wednesday, January 19, 2011

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்


தம்பிராசா மனோகன்மணி

ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் நீர்வேலி மேற்கு, மாசுவனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா மனோன்மணி நேற்று (19.01.2011) புதன்கிழமை இறைபதமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகேந்திரம்  செல்லமுத்து தம்பதியரின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் தங்கமுத்து தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற தம்பிராசாவின் அன்பு துணைவியும், சிவனேஸ்வரி (நீர்வேலி), அழகேஸ்வரி (லண்டன்), சகுந்தலாதேவி (கனடா), பத்மநாதன் (பிரான்ஸ்), பரராஜசிங்கம் (ஆனந்தன் பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்.
.அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.01.2011) வியாழக்கிழமை நீர்வேலி மாசுவனில் அவரது இல்லத்தில் நடை பெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப 1 மணிக்கு நீர்வேலி சீயாக்காடு இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்
.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்-தவராஜா  
                 சிங்கம்                                                                                                             மாசிவன்.   124