| பிரித்தானியா அரசு தமது நாட்டுக்கு வருபவர் களுக்கான விஸாவை கடுமையாக்குவது அறி ந்ததே இதற்கமைய பிரிட்டனுக்கு செல்ல விரு ம்பும் மாணவர்கள் மார்ச் மாதமளவில் நடைமு றைக்கு வருகின்ற புதிய விஸா விதிமுறைக ளைப் பின்பற்றவேண்டும் என்று பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகத்தின் பேச்சாளர் நடீஷா எப்பசிங்க தெரிவித்துள்ளார். |
| இந்த புதிய நடைமுறைகளால் ஏற்கனவே மாணவர் விஸா பெற்றுக்கொண்டவர்களுக் கு ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை களின்படி மாணவர்களின் கல்வித்திட்ட நிலைக்கமைய அவர்கள் பகுதிநேர வேலை செய்யும் நேரம் கட்டுப்படுத்த ப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு குறைந்தகால படிப்பை மேற்கொள்ளவுள்ள மாணவர்கள் தம்மில் சார்ந்துள்ளவர்களை பிரிட்டனுக்கு அழைத்து ச்செல்ல முடியாது அத்தோடு பல்கலைக்கழ க பட்டம் அல்லது அடிப்படை நிலைக்கு கீழான படிப்பைப் படிக்கச் செல்பவர்கள் பிரிட்டனில் பகுதிநேர வேலையை பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மிகுந்த நம்பிக்கையான ஆதரவாளர் திட்டத்தையே பிரிட்டன்அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரி வித்துள்ள எப்பசிங்க இவ்வாறான ஆதரவாளர்கள் மட்டுமே கல்வித்தி ட்டங்களை வழங்கவும் பல்கலைக் கழகத்துக்கு குறைந்தமட்ட பாடங் களின் அடிப்படையில் பணிவாய்ப் புகளை வழங்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்தோடு ஆங்கில அறிவையும் திருப்திகரமானதாக இருக்கவேண்டும் என இப்புதிய நடைமுறையில் எதிர் பார்க்கப்படுகிறது இப்புதிய நடைமுறை ஏப்ரல் மாதம் 6ம் திகதி நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. |
Wednesday, March 23, 2011
விஸா புதிய நடைமுறை
Subscribe to:
Posts (Atom)

