யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த திருக்குடும்ப கன்னியர் மடத்தில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் இன்று காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டமைக்கு காதல் விவகாரமே காரணம் எனத் தெரிய வருகிறது. |
19 வயதான சகாய ராசா தர்ஷினி என்ற இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டமை தெரிந்ததே. குறித்த மாணவியின் காதல் விவகாரம் தந்தைக்குத் தெரிய வந்ததை யடுத்து தந்தையார் கண்டிக்கவே மாணவி தனது அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது. மாணவியின் சடலம் பிரேத பரிசோத னைக்காக யாழ்,வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.குருநகர் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |
Wednesday, February 16, 2011
யாழ்.மாணவி தற்கொலை செய்து கொண்டமைக
Subscribe to:
Posts (Atom)

