Saturday, January 15, 2011

16-01-2011

முன்னாள் புலிகள் 78 பேர் பொங்கலை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர்


தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் 70 இற்கும் அதிகமானோர் வவுனியா புனர்வாழ்வு முகாமில் இருந்து இன்று காலை விடுவிக்கப்பட்டனர். புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட முன்னாள் புலிகள் 78 பேர் பொங்கலை முன்னிட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
124
தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினமான இன்று தமிழர்களுக்கான ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் நன்மை கருதி தமிழ்-24 (ரி-24) எனப்படும் இந்தப் புதிய தமிழ் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும், தமிழ் மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் இந்தத் தொலைக்காட்சி ஊடாக வலம்வரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர்.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஒளிபரப்பாகும் இந்த தெலைக்காட்சிச் சேவை, தமிழர்கள் பரந்துவாழும் உலக நாடுகளெங்கும் விரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது தனது பரீட்சார்த்த ஒளிபரப்புக்களை மேற்கொள்ளவுள்ள இத் தொலைக்காட்சி, சில தினங்களில் 24 மணி நேர சேவையைத் தொடங்கவுள்ளனர்.
கடந்த காலங்களில் பேராதரவு வழங்கிய தமிழ் மக்கள், இப்புதிய தொலைக்காட்சி ஊடாக வரும் தங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கி கரம்கோர்த்து நடந்துவருமாறு இத்தொலைக்காட்சியை ஆரம்பித்துள்ளவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
ஈரோபேர்ட் 9V (Eurobird 9A (9 degree East) Freq: 11843-V, Symbol Rate: 27500, Fec: 3/4 எனப்படும் அலைவரிசை ஊடாக இத் தொலைக்காட்சியை நீங்கள் காலை 10 மணி முதல் பார்வையிட முடியும்
124

16-01-2011

நீர்வேலியில் யுவதியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த சிப்பாய்க்கு பனைமரத்துடன் கட்டிவைத்து பச்சைமட்டை அடி

யாழ். நீர்வேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள்
அத்துமீறி பாலியல் வக்கிரத்துடன் இராணுவச்
 சிப்பாய் ஒருவர் படைமுகாமிலிருந்து
வெளியே பெண்கள்
தனித்திருக்க்கும்வீடுகளைத்தேடி , வீடொன்றினுள்
உட்பிரவேசித்து யுவதி ஒருவரை பாலியல்
 வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளார். இச்சம்மவமானது
நேற்று அதிகாலை நீர்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நீர்வேலியிலுள்ள படைமுகாமைச் சேர்ந்த
இராணுவச் சிப்பாய் என அடையாளம்
 கண்ட பொதுமக்கள் பனைமரத்துடன் 
கட்டிவைத்து பச்சைமட்டையால்
அவரை தாக்கியுள்ளனர். எனினும் பொதுமக்கள் கிடைத்த
 சந்தர்ப்பத்தை தவற விடவில்லை.
 மோசமான பச்சைமட்டை தாக்குதலுக்கு
 பின்னர் நேற்றயதினம்
காலை 10 மணியளவில் யாழ். கோப்பாய்
 பொலிஸாரிடம்அச் சிப்பாய் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ். கோப்பாய் பொலிஸார் அவரை யாழ்.நீதிவான் வீட்டீல்
ஆஜர்படுத்தினர். ஒரு வாரத்திற்கு
வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற
நீதிமதி ஏ.ஏ ஆனந்தராஜா உத்தரவு
 பிறப்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

124
காதல் மழை

கடற்கரையில்
நம்மை
பார்த்ததும்
ஆசையாய்
பாதங்களை
ந‌னைக்க வந்த‌
அலைகளையும்
வெட்கம் கொள்ள செய்தன
நம் இதழ்கள்!


மேலும் காதலுக்கு