நீர்வேலியில் யுவதியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த சிப்பாய்க்கு பனைமரத்துடன் கட்டிவைத்து பச்சைமட்டை அடி
யாழ். நீர்வேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி பாலியல் வக்கிரத்துடன் இராணுவச் சிப்பாய் ஒருவர் படைமுகாமிலிருந்து வெளியே பெண்கள் தனித்திருக்க்கும்வீடுகளைத்தேடி , வீடொன்றினுள் உட்பிரவேசித்து யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளார். இச்சம்மவமானது நேற்று அதிகாலை நீர்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. |
நீர்வேலியிலுள்ள படைமுகாமைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் என அடையாளம் கண்ட பொதுமக்கள் பனைமரத்துடன் கட்டிவைத்து பச்சைமட்டையால் அவரை தாக்கியுள்ளனர். எனினும் பொதுமக்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடவில்லை. மோசமான பச்சைமட்டை தாக்குதலுக்கு பின்னர் நேற்றயதினம் காலை 10 மணியளவில் யாழ். கோப்பாய் பொலிஸாரிடம்அச் சிப்பாய் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ். கோப்பாய் பொலிஸார் அவரை யாழ்.நீதிவான் வீட்டீல் ஆஜர்படுத்தினர். ஒரு வாரத்திற்கு வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிமதி ஏ.ஏ ஆனந்தராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. |
124

No comments:
Post a Comment