Saturday, January 22, 2011

1000 தமிழ் பொலிசாரை தேர்வு செய்வதற்கான நேர்முகம் நடக்கின்றது

1000 தமிழ் பொலிசாரை தேர்வு செய்வதற்கான நேர்முகம் நடக்கின்றது


வடக்கில் மேலும் 1000 தமிழ் பொலிசாரை  இணைக்கும் முகமாக  நேர்முக தேர்வினை அரசாங்கம் அண்டாத்திவருகின்றது. இந்த நேர்முகத்தில் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள் பங்குபற்றுகின்றனராம். எற்கனவே 336 தமிழ் பொலிசார் பயிற்சி முடித்து கடமையில் ஈடுபட்டுள்ளனராம்.
இந்த பொலிஸ் வேலைக்கு சிறிலங்காவில் ஏற்கனவே பொலிஸ் வேலைகளில் இருந்து 1983 காலப்பகுதியில் விலகிய தமிழர்களின் பிள்ளைகள் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
124
 

கல்வி நிலையத்திற்க்கு தீ வைப்பு

யாழ்ப்பாணத்தில் விசமிகள் கைவரிசை.. தனியார் கல்வி நிலையத்திற்க்கு தீ வைப்பு


யாழ்ப்பாணம் கந்தர் மடத்தில் தனியார் கல்வி
நிலையம் ஒன்று தீக்கிரையாகியுளள்து.
யுனிவேசல் கல்வி நிலையமே நேற்று
இரவு தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைக்
கண்ணுற்ற யாழ்ப்பாணம் மாநகர சபையின்
 பஸ் சாரதியொருவர் உடனே யாழ்ப்பாணம்
 மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்கு
 தகவல் வழங்கியதைத் தொடர்ந்து உரிய
 இடத்திற்க்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர்
 தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆனாலும் இரண்டு கொட்டில்கள் முழுமையாக
எரிந்துள்ளதுடன் அங்கிருந்த வாங்குகள் மற்றும்
 உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
இத்தகையதொரு சம்பவம் கடந்த வாரத்தில்
 யாழ்ப்பாணம் கண்ணாதிட்டிப் பகுதியில் உள்ள
 தனியார் கல்வி நிலையத்திற்க்கும் ஏற்பட்டு
பல லட்சம் ரூபாக்கள் நட்டமேற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.









இத்தகைய சம்பவங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில்
விசமிகளின் செயல்பாட்டிற்கு தனியார் கல்வி
 நிலையங்கள் உட்பட்டு வருகின்றது. இது
சம்பந்தமாக பொலிசார் உரிய விசாரணைகளை
 மேற்கொள்வதுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை
 எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்
தெரிவிக்கின்றனர். 
124

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்
 


பூநகரி, பாலாவியைப் பிறப் பிடமாகவும், ,  அச்செழு மேற்கு, நீர்வேலியை வசிப்பிட மாகவும் கொண்ட சின்னத் தம்பி தில்லைநாதன் 20.01.2011 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர் களான சின்னத்தம்பிபாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், புனிதமலரின் அன்புக் கண வரும், தேவராஜா (கனடா), சண்முகராஜா (லண்டன்), புஸ்பா, ரவீந்திரராஜா (கனடா) காலஞ்சென்றவர்களான கஜேந் திரராஜா, ஜெயந்தினி மற்றும் விஜி, பத்மராஜா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (23.01.2011) ஞாயிற்றுக்கிழமை மு.ப.10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அச்செழு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்

.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்-தவராசா குடும்பத்தினர்
124

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி
 
 
கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி இல்ல விளையாடு போட்டியை முன்னிடு (22.01.2011) நடத்தப்பட்ட வீதி ஓட்டத்தில் முதலாம் இடம் பெற்ற மாணவன் ...
124

காதலியே!

காதலியே


சந்திரதேவதையே!
சிந்திக்க நேரமிருந்தால்-உனை
சந்தித்தும் மகிழ்ந்திருப்பேன்!

எந்தன் இயந்திர வாழ்க்கையின்
இதயத்துடிப்பை உணர்ந்துந்தன்
நினைவுகளின் தென்றலில் தான்!

ஞாபகங்கள் வெட்கப்படுகிறது
என் இதழை ஈரமாக்கின
உன் இதழ்களை நினைத்ததும்!

அழகிய பூங்காவில் நாம் !

எனது விரல்களை வரவேற்ற
மாங்கனிகளுக்கும் மயக்கம்!

முத்தமிடும் அந்த தருணங்களில்
தேனில் ஊறின கனிகளாகினோம்

நம் பாதங்களும்
முத்தமிட்டுக்கொண்டன...

பூங்காவின் சிலைகளெல்லாம்
நமது லீலைகள் கண்டு
வியந்தவைகளோ...!

விடியற்காலை
அன்று
நம்மைக் கண்டதும்
சூரிய உதயம் தாமதமென்றது!


நமது முத்த மழை கண்டு
சித்திரமாத வறுமை வானம்
அன்பளிப்பாய்
பொழிந்தன பூமழை!

நமைத்தவிர யாருமில்லா
உலகமதில் மகிழ்ந்தோம்
ஆனாலின்று
நாமிருவருமில்லா உலகத்தில்
நம்மைத் தேடுகிறது - பாவம்
காதல்!
124.