அநுராதபுரம் சிறையில் கலவரம், பெண் கைதி உயிரிழப்பு. 23 பேர் காயம், அம்புலன்ஸ்கள் விரைவு: போராட்டத்துக்கு மத்தியில் நீதிமன்றக் கட்டடமும் தீப்பற்றி எரிந்தது பிந்திய தகவலின்படி அநுராதபுரம் வைத்திய சாலையில் 23 பேர் அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் ஒரு பெண் கைதி உயிரிழந்ததுடன் மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
| அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் போராட்டம் தொடாந்து இன்றும் இடம்பெற்று வருவதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தமக்கான அடிப்படை வசதிகளை வழங்குமாறு கோரியே நேற்று மாலையிலிருந்து இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. சிறைச்சாலைக் கூரையின் மீது ஏறி அமர்ந்துள்ள கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உறுதியளிக்கப்படும் வரை போராட்டம் தொடருமென அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. இதேவேளை, அநுராதபுரம் நீதவான் நீதிமன்ற கட்டடத்தின் ஆவணப் பாதுகாப்புத் தொகுதியில் இன்று அதிகாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முக்கிய வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் பெருமளவில் அழிந்து விட்டதாகப் அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அநுராதபுரம் சிறையில் கலவரம், ஒருவர் பலி பலர் காயம், அம்புலன்ஸ்கள் விரைவு: அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே ஒரு பெண் கைதி கொல்லபட்டாரென அறிவிக்கப்படுகிறது. இதேவேளை, படுகாயமடைந்த நால்வர் சற்று நேரத்துக்கு முன்னர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என அநுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தன . இவர்களில் ஒருவர் சிறை அதிகாரி. ஏனைய மூவரும் சிறைக் கைதிகளாவர். இதேவேளை, அநுராதபுரம் வைத்தியசாலையைச் சேர்ந்த ஆறு அம்புலன்;ஸ் வண்டிகள் சிறைச் சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனவென்றும் அந்த வட்டாரங்கள் கூறின. அநுராதபுரம் சிறை ச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் நேற்று மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே. தமக்கான அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டுமெனக் கோரியே சிறைச்சாலையின் கூரை மேலேறி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் |
Monday, January 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment