நீர்வேலியில் விபத்து ...
கூலர் ரக எல்வ் வாகனம், மோட்டார் சைக்கிள், ஹைஏஸ் வாகனம் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று நேற்றுத் திங்கட்கிழமை நீர்வேலிச் சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்றது.
இந்த விபத்துச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நீர்வேலியைச் சேர்ந்த இராசலிங்கம் தவசீலன் என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
பருத்தித்துறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கூலர் வாகனம் முன்னே சென்ற மோட்டார் சைக்கிளை மோதி சுமார் 50 மீற்றர் தூரம் இழுத்துச் சென்றது. அதனைத் தொடர்ந்து கூலர் வாகனம், எதிரே வந்த ஹைஏஸ் வாகனத்தையும் மோதித்தள்ளியது. பின்னர் ஹைஏஸ் வாகனம் அருகில் உள்ள தோட்டக்காணிக்குள் பாய்ந்து நின்றது.அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தை அறிந்த மக்கள் அங்கு புதினம் பார்க்கக் கூடினர். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த அச்சுவேலிப் பொலிஸார் கூலர் வாகனம் சகிதம் அதன் சாரதியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.ஹைஏஸ் வாகனச் சாரதி காயம் ஏதும் இன்றித் தப்பிக் கொண்டார்

நீர்வேலிச் சந்தியில் இருந்து சிறுப்பிட்டிப் பக்கமாக 400 மீற்றர் தூரத்தில் பருத்தித்துறை வீதியில் இந்த விபத்து இடம் பெற்றது. நீர்வேலியிலுள்ள ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையத்தில் இருந்து ஐஸ்கிறீம் விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் பிரஸ்தாப இளைஞர் பருத்தித்துறை வீதி வழியே பயணித்துக்கொண்டிருந்தார்.
பருத்தித்துறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கூலர் வாகனம் முன்னே சென்ற மோட்டார் சைக்கிளை மோதி சுமார் 50 மீற்றர் தூரம் இழுத்துச் சென்றது. அதனைத் தொடர்ந்து கூலர் வாகனம், எதிரே வந்த ஹைஏஸ் வாகனத்தையும் மோதித்தள்ளியது. பின்னர் ஹைஏஸ் வாகனம் அருகில் உள்ள தோட்டக்காணிக்குள் பாய்ந்து நின்றது.அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தை அறிந்த மக்கள் அங்கு புதினம் பார்க்கக் கூடினர். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த அச்சுவேலிப் பொலிஸார் கூலர் வாகனம் சகிதம் அதன் சாரதியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.ஹைஏஸ் வாகனச் சாரதி காயம் ஏதும் இன்றித் தப்பிக் கொண்டார்
தகவல்,-மாசுவன் இணையம்
124

No comments:
Post a Comment