யாழ். நவாலி கிழக்கு பகுதியில் உள்ள பாழடைந்து வீட்டில் தூக்கில் தெங்கிய நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் ஒன்றை மானிப்பாய் பொலிஸார் இன்று காலை 6 மணியளவில் மீட்டுள்ளனர்
நவாலி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய மாரிமுத்து கணபதியம்மா என்பவருடைய பிள்ளைகள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் இவர் தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாழடைந்த வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் கொடுத்த தவகலின் அடிப்படையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சடலத்தை யாழ். போதன வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இவரது மரணம் குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:
Post a Comment