Wednesday, March 9, 2011

இன்று அதிகாலை காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட

காதலில் கட்டுண்ட இரு பாடசாலைகளைச் சேர்ந்த ஒரு மாணவனும் ஒரு மாணவியும் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொள்ளும் நோக்குடன் ஹிரன பாலத்திலிருந்து பொல்கொட ஆற்றில் குதித்துள்ளனர்.


தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட யுவதி மீனவர்களின் உதவியுடன் அருகிலுள்ள ஹோட்டல் பணியாளர்களினால் காப்பாற்றப்பட்டுள்ள அதேவேளை, குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞருடனான உறவைக் கைவிடுமாறு யுவதிக்கு பெற்றோர் எச்சரித்திருந்தனர். இதனை ஏற்காத நிலையில் இவர்கள் தற்கொலை செய்வதற்கு தீர்மானித்ததாக தெரியவருகிறது.


மடபாதவை சேர்ந்த எஸ்.ஏ.கவிந்து டில்சான் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவர். கடற்படை சுழியோடிகளால் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர் வெள்ளவத்தையிலுள்ள பாடசாலை ஒன்றிலும் மேற்படி யுவதி மொரட்டுவையிலுள்ள பெண்கள் பாடசாலை ஒன்றிலும் கல்வி கற்பவர்களென விசாரணைகளிலிருந்து 


தெரியவந்துள்ளது.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment