Sunday, February 20, 2011

யாழ்.நகரப் பகுதியில் நேற்று முன்தினம்

யாழ்.நகரப் பகுதியில் நேற்று முன்தினம் முற்பல் 11 மணியளவில் பெண் ஒருவரின் கைப்பையைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்ற இளம் பெண் ஒருவரை அங்கு கூடி நின்ற மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும்தெரிய வருவதாவது 
யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி நடந்துவந்து கொண்டிருந்த பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து வந்த இளம்பெண் ஒருவர் பஸ் நிலையத்துக்கு அண்மையிலுள்ள வைரவர் ஆலயத்துக்கு அருகில் வைத்து அவரது கைப்பையைப் பறித்துள்ளார். இதனைக் கண்ட அந்தப் பெண்ணின் பின்னால் வந்த உறவினர்கள் கூச்சலிட்டதை அடுத்து அங்கு திரண்ட மக்கள் திருட முயற்சித்த இளம் பெண்ணைக் கலைத்துப்பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.                        

No comments:

Post a Comment