கடந்த ஓரிரு வாரமாகக் குறைந்து போயிருந்த துப்பாக்கிச் சுட்டுச் சம்பவங்கள் இன்று மீண்டும் குடா நாட்டில்
தலை தூக்கியுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குடாநாட்டுக்கு விஜயம் செய்து விட்டுத் திரும்பி முழுமையாக ஒரு நாள் கூடக் கழியாத நிலையில் 'இனந்தெரியாத நபர்கள்' மீண்டும் யாழ். மானிப்பாய்ப் பகுதியில் தமது கைவரிசையைக் காட்டி இருக்கின்றனர்.
ஜனாதிபதி வந்து திரும்பும் வரை அமைதி காத்திருந்து விட்டு போனதும் தமது கைங்கரியத்தைத் தொடங்கியது போல ஆயுததாரிகளின் வேட்டுக்கு இலக்காகி இருக்கிறார் ஒரு அந்தணப் பெண்மணி.
மானிப்பாய்ப் பகுதியில் உள்ள அதிகாரி செல்லமுத்து சந்திக்கு அண்மையில் அன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் கூழாவடி, ஆனைக்கோட்டையைச் சேர்ந்த திருமதி பாலசுந்தரம் நிமோசா என்ற 33 வயதுடைய அந்தணப் பெண்மணியே காலில் காயமடைந்திருக்கிறார். காயமடைந்தவர்
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மேலதிக படையினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன

No comments:
Post a Comment