Sunday, February 27, 2011

வாகன விபத்துகள் அதிகரிப்பு

யாழ்.  கண்டி வீதியில் நாவற்குழி பாலத்துக்கு இரு கரையிலும் வேகத் தடுப்பு அணை மீண்டும் போடப்பட வேண்டுமென வீதியின் பாவனையாளர்கள் கோரிக்கை விடுக் கின்றனர்.


மழை காலங்களில், கடும் பனி காலங்களில் பாலத்தின் இரும்புருக்குத் தரை வழுக்கும் தன்மை உடையதாக உள்ளது. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் வழுக்கிச் சென்று விபத்துக்களுக்கு உள்ளாகின்றன.
மிக அண்மையில் விசுவ மடுவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய டொல்பின் வான் ஒன்று அதிகாலை பனி நீரால் வழுக்கி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது.

மோட்டார் சைக்கிள்களின் பயணிகள் அடிக்கடி சறுக்கி விழுந்து விபத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் பாலத்தின் இரு கரைகளிலும் முன்னரைப் போன்று வேகத்தடை போடப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகனத்தில் செல்வோர் மெதுவாகச் செல்ல வேண்டும்' என்ற அறிவித்லை மும்மொழிகளிலும் இடல் வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment