Saturday, February 12, 2011

மீண்டும் வெள்ளை வான் பீதி சுன்னாகம் மக்கள் முறைப்பாடு


 சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கந்தரோடைப் பகுதியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு வெள்ளை வானில் வந்த வர்கள் அப்பகுதியிலுள்ள வீடுகளைத் தட்டினர் என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


அப்பகுதி கிராம சேவை அதிகாரி சகிதம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்திலும், நள்ளிரவு வெள்ளைவானில் வந்தவர்களால் தட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் வீட்டின் உரிமையாளர்கள் 4 பேர் இணைந்து இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

இந்த வெள்ளை வானில் வந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள், சுமார் 5 இற்கும் அதிகமான வீடுகளுக்கு முன்னால் நின்று வீட்டின் உரிமையாளர்களை வெளியே வருமாறு அழைப்பு விடுத்தனர் என்றும்,  மிகவும் கொச்சையான தமிழிலிலேயே அவர்களது அழைப்பு இருந்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வராத நிலையில் குறித்த வாகனத்தில் சென்ற நபர்கள் அவ்விடத்தில் சுற்றித் திரிந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு விட்டுச் சென்று விட்டனர் எனக் கூறப்படுகிறது.
 

No comments:

Post a Comment