Sunday, February 13, 2011

நீர்வேலியில் காதலர் தினம் கொண்டாடும்

இன, மத, சாதி, மொழி, ஊர், நாடு பேதமின்றி அனைவரையும் ஒன்றிணைக்கும் வலிமை உண்மையான காதலுக்கு மட்டுமே உள்ளது. காதலர் தினம் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

காதலர் தினம்"





நம்மவர் தினமல்ல
“காதலர் தினம்”

காதலர் தினமாம்
கவிதையில் மட்டும்
எழுதுகின்றேன்
நேசித்த நானும்
யோசித்த நீயும்
முடிவு எடுக்கவில்லை
முதலாவது காதலர் தினம்
கொண்டாடுவதற்கு.

நாளையதினம்
நம்மவர் தினமல்ல
காதலர் தினம் - இது
காதலிப்பவர்களுக்கு.

எமது காதல் - மன்னிக்வும்
பெயர் கூட இல்லை
நாம் என்ன செய்தோம் என

நேசித்தோம், யோசித்தோம் - ஆனால்
நேற்று நடந்தது என்ன?
கண்ணாம் பூச்சி விளையாட்டு
எம் காதலிலும் கூடவா?

கனவாகிப் போனதடி
நினைவான எம் காதல்
காலத்தின் கோலம் என
கவிதையில் மட்டும்
வடிக்கின்றேன்
என் காதலின் கதையை.

கண்ணே! புரிந்துவிடு
கண்ணீரில் வடிக்கிறேன்.
என் கவிதையை
என் காதலுக்காக…..

No comments:

Post a Comment