Wednesday, January 26, 2011

இவர்கள் யார்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இவர்கள் யார்


BY-CBBI
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருந்தோர் மீது பொலிஸார்
மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்
 இருவர் படுகாயமடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்
டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலையில்
 இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி
மேலும் தெரிய வருவதாவது..
இன்று காலையில் தெவிந்துர
பிரதேசத்தில் தலைக் கவசம் அணியாத
நிலையில் மோட்டார் சைக்கிளில் இருவர்
சென்று கொண்டிருந்தனர். வீதியில்
அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனைச்
 சாவடியைக் கடக்க முற்பட்ட இவர்களைப்
 பொலிஸார் தடுத்து நிறுத்த முயற்சித்த
போது அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது
வேகமாக மோட்டார் சைக்கிளைச்
செலுத்திச் சென்றனர். இதனை
யடுத்துப்பொலிஸார் அவர்கள்
 மீது துப்பாக்கிப் பிரயோகம்
மேற்கொண்டனர். இதன்
காரணமாக அதில் பயணித்த
இருவரும்படுகாயமடைந்தனர்.



தற்போது இவர்கள் இருவரும் மாத்தறை 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
 இருந்தும் இவர்கள் இருவரதும் பெயர்விபரம்
வெளிவிடப்படவில்லை.

No comments:

Post a Comment