Tuesday, January 25, 2011

இலங்கை வாலிபர்கள் இருவர் கைது

இலங்கை வாலிபர்கள் இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது

இந்திய விமான நிலையத்தில் போலி
 ஆவணங்களுடன் இரு இலங்கையர்கள்
 கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய
ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது
. சென்னையில் இருந்து ஜேர்மனிக்கு
 விமானம் ஒன்று புறப்பட தயாராக
இருந்தது. அதில் இருந்த பயணிகளிடம்
 குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது இலங்கை வவுனியாவை
 சேர்ந்த சுதேஷ்கரன் (23) என்பவர்,
போலி ஆவணங்கள் வைத்திருந்தது
 தெரியவந்தது. அவரை விமான நிலைய
பொலிஸார் கைது செய்தனர். அவரிடம்
 நடத்திய விசாரணையில் அவர்
இலங்கையில் இருந்து ஜேர்மனி
செல்ல முடியாததால் சென்னை
வந்ததாகவும் இங்குள்ள புரோக்கர்கள்
 மூலம் போலி ஆவணம் தயாரித்து
 ஜேர்மனி செல்ல முயன்றதாகவும்
தெரிவித்தார்

124

No comments:

Post a Comment