சிறுத்தை
நடிகர் : கார்த்தி
நடிகை : தமன்னா
ஸ்டூடியோக்ரீன் மூவிஸ் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிப்பில், கார்த்தி முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் சிறுத்தை.
பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஒரு முத்திரையை பதித்தார். இதனைதொடர்ந்து முதன்முறையாக இரட்டை வேடத்தில், பிக்பாக்கெட், போலீஸ் டி.எஸ்.பி., என இரண்டு முரண்பட்ட பாத்திரங்களை ஒரே இடத்தில் ஏற்று சவாலான திறமையை காட்டியுள்ள படம்தான் சிறுத்தை. தமிழ், தெலுங்கில் முன்னணி ஒளிப்பதிவாளரும், தெலுங்கில் செளர்யம், சங்கம் படங்களை இயக்கி ஆந்திராவில் வெற்றிபட இயக்குனர் என்று முத்திரை பதித்த தமிழருமான சிவா இப்படத்தை இயக்குகிறார்.

படத்தில் வரும் பிக்பாக்கெட் கேரக்டருக்காக, பிக்பாக்கெட்ரானின் அசல் தன்மை, அவர்களின் அன்றாட வாழ்க்கை செயல்பாடுகள் என்பதை எல்லாம் அறிந்து கொள்ள வடசென்னையில் நிஜ பிக்பாக்கெட்காரரின் செயல்களை கவனித்து நடித்திருக்கிறார் கார்த்தி. அதேபோல் டி.எஸ்.பி., கேரக்டரிலும் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சென்னையை சுற்றி கதை படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் அனைவரும் பேசப்படும் விதமாக ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதில் மனதை பதைபதைக்க வைக்கும் விதமாக மூன்று வயது குழந்தையை வைத்து உச்சகட்ட சண்டைகாட்சியை படமாக்கியுள்ளார் இயக்குனர்.
படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். கார்த்தியுடன் இணைந்து காமெடியில் சந்தானம் கலக்கியிருக்கிறார். இவர்கள் தவிர அவினாஷ், சுப்ரீத், மேகனா நாயர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நா.முத்துக்குமார், விவேகா, அறிவுமதி இவர்களின் பாடல் வரிகளுக்கு, வித்யாசாகர் இசையமைத்துள்ளார். ஆர்.வேல்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு வேலைகள் முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. பொங்கல் அன்று படம் திரைக்கு வருகிறது.
124

No comments:
Post a Comment