யாழ். உரும்பிராய் பகுதி கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
யாழ். உரும்பிராய் பகுதியில் பாலடைந்த கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை 6 மணியளவில் கோப்பாய்ப் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கவருடைய இந்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
124

No comments:
Post a Comment