Friday, January 14, 2011

காய்ந்த சருகாக!
*******************

மலருமுன்னே
ஓர் மொட்டு
கண் முன்னே
காய்ந்த சருகாக!

பசி என்னும்

கொடிய மிருகம்
வாட்டி வதைக்க
பட்டினியில் போராடி…
நோயில் வாடி வதங்கி…

தலை நிமிர்ந்து
நடக்கத் தஞ்சமின்றி
தலை கவிழ்ந்து
பரிதாபமாய்…

கொத்திச் செல்வதற்காய்
கொடிய கழுகும்
அருகே காத்திருப்பு!

கண்காணாத கடவுளுக்காய்
பாலால் அபிசேகம்!

காச்சிப் படைத்து
அடிக்கடி அன்னதானம்!

ஆனால்
கண்முன்னே
காணும் வறுமைக்கு
கை கொடுக்க
ஏனோ மனம் வருவதில்லை…?124

No comments:

Post a Comment