Friday, January 14, 2011

அதிசயப் பிறவியோ நீ…?
***************************

கனவுகளைச் சுமந்த
உன் விழிகளுக்கு
கண்ணீர்
பரிசாய்க் கிடைத்த போதும்….

இடி விழுந்து
இதயமே நொருங்கி
அடியோடு சாய்ந்து விழும்
மலை போல் ஓர் சோகம்
உன்னைத் தாக்கியிருக்க…

ஒரு நொடி கூட
இடிந்து போகாமல்
இடி தாங்கி போல் தாங்கி
உன் இதயத்தைக் கல்லாக்கி
ஒடிந்து போய் விடாத
உன் திடம் கண்டு
எனக்குள்ளே ஓர் வியப்பு!

எப்படி? … எப்படி?
உன்னால் மட்டும்
இப்படி இருக்க முடிகிறது…?

துயரங்களைத் துச்சமாய்
தூக்கி எறிந்து விட்டு
இந்த வாழ்க்கையை - நீ
அற்புதமாய் ரசிப்பதைக் கண்டேன்.

வாழ்க்கை ஓர்
நந்தவனம் என்கின்றாய்!

பூக்களை
புனிதமாய் நேசிக்கின்றாய்!

இந்த இயற்கையை
அணுவணுவாய் ரசிக்கின்றாய்!

எப்போதும்
உன் சிரிப்பெனும் சங்கீதத்துடன்
வலம் வரும் நீ
இப்படியே வாழவேண்டும்.

ஆனாலும்
இதெப்படி உன்னால் முடிகிறது...?
எனக்கும் சொல்லிக்கொடேன்.

அடடா!...
ஒருவேளை
ஆண்டவனால் படைக்கப்பட்ட
அதிசயப் பிறவியோ நீ...?

No comments:

Post a Comment