சிலாபம் - கொழும்பு வீதிக்கு இடைப்பட்ட மாரவில பிரதேசத்தில் இன்று காலை 7 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் ஏழு பேர் காயமடைந்தனர்.
முதலில் கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் தனியார் பஸ் ஒன்றுடன் மோதூண்டது இதனால் வானில் பயணித்த அனைவரும் காயமுற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்விபத்து நடைபெற்று சில விநாடிகள் முன்பு மோதூண்ட வானுடன் மற்றுமொரு பயணிகள் பஸ் மோதியுள்ளது. இரு பஸ்சாரதிகளும் போட்டி போட்டு ஒன்றுக் கொன்றினை முந்திச் செல்ல முயற்சித்ததாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமுற்றவர்களில் 6 பேர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்த ஒருவர் கொழும்பு வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்



No comments:
Post a Comment