Monday, June 6, 2011
கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்பு
கிளிநொச்சி மக்கள் வங்கிக் கிளைக்குப் பின்புறமாகவுள்ள கிணறு ஒன்றிலிருந்து சுமார் 20-25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.பொதுமகன் ஒருவர் கொடுத்த தகவலையடுத்து இந்தக் கிணறு இருந்த பகுதிக்குச் சென்ற கிளிநொச்சி பொலிஸார் கிணற்றிலிருந்து பெண்ணில் சடலத்தை மீட்டுள்ளனர்.
அடையாளம் காணப்படாத இந்தச் சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சடலத்தை இனங்காட்டக்கூடிய எவராது வந்து சடலத்தை பொறுப்பேற்பதற்காக சடலம் யாழ் வைத்தியசாலை பிரேத அறையிலேயே வைக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment