Wednesday, March 16, 2011

பூசகர் ஓருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்



சாவகச்சேரியில் வரணி இயற்றாலை பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிலிருந்து பூசகர் ஓருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த 24 வயதுடைய குணானந்த சர்மா கரிகரசர்மா எனும் இளம் பூசகரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சடலத்தை சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை சென்று பார்வையிட்டதுடன் பிரேதப் பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் சடலத்தை ஓப்படைக்குமாறு சாவகச்சேரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இறந்த இப் பூசகர் இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக உறவினர்களால் பொலிஸாரிடம் முறையிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment