| பொலன்னறுவை - ஹிங்குரக்கொட வீதியில் ஹத்த முன பகுதியில் ஹத்தமுன பாலத்திற்கு அருகில் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை இடம் பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குரக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிங்குரக்கொட பொலிஸார் குறிப்பிட்டனர். |
| காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமென தெரிவிக்கப்படுகிறது. ரயர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பஸ் 15 அடி பல்லத்தில் வீழ்ந்து விபத்துக் குள்ளாகியுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர் |


No comments:
Post a Comment