யாழ். கரவெட்டியில் விபத்து: குடும்பஸ்தர் பலி
யாழ்.கரவெட்டி பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கரவெட்டி நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று பிரதேச செயலகத்துக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர் மீது மோதியது.
எஸ். துரைராசா (வயது-40) என்பவரே சம்பவ இடத்தில் பலியானவர் ஆவார்.நெல்லியடிப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இவ்விபத்து சம்பந்தமான விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்


No comments:
Post a Comment