Thursday, January 20, 2011

திடீர் சோதனை

குடாநாட்டின் பல பகுதிகளிலும் படையினர் நேற்றிரவு திடீர் சோதனை


குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு படையினர் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக வலிகாமம், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. அத்துடன் யாழ்.நகர நுழைவாயில்களில் அமைந்துள்ள படை முகாம்களில் நகருக்குள் நுழையும் வாகனங்கள் தொடர்பில் படையினர் பதிவுகளை மேற்கொண்டனர்.


குடாநாட்டில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்களும், திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்துள்ள நிலையில் படையினர் நேற்று இரவு வீதிச் சோதனையில் ஈடுபட்டனர். இதேவேளை யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்ளைக் கட்டுப்படுத்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க அண்மையில் நிகழ்வு ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல் 124

No comments:

Post a Comment