சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான வன்னிக்கான சேவையினை இ.போ.ச. பஸ்கள் நேற்றுமுதல் ஆரம்பித்தன
| கேரதீவு சங்குப்பிட்டி ஊடாக போக்குவரத்துச் சபையின் பஸ்சேவை நேற்று முதல் ஆரம்பமாகியது . மகிந்தராஐபக்ச நேற்று முன்தினம் வைபவ ரீதியாக கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்தைத் திறந்து வைத்திருந்தார்.அதை அடுத்து யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்கந்தபுரத்துக்கு நேற்று பஸ் ஒன்று முதலாவதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. |
| கேரதீவு சங்குப்பிட்டி ஊடாக இன்று முதல் இடம்பெறவுள்ள சேவைகள் குறித்த விவரங்களை போக்குவரத்துச் சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் க.கணேசபிள்ளை வெளியிட்டுள்ளார் . அவர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி � நல்லூர் வரையான பஸ் சேவை இன்று முதல் யாழ். பஸ் நிலையத்தில் இருந்து தினமும் சாவகச்சேரி, தனங்கிளப்பு ஊடாக பூ நகரி � நல்லூர் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.இத்துடன் பூநகரி-நல்லூரில் இருந்து இதே பாதை வழியாக தினமும் காலை 9 மணிக்கும் மாலை 4.30 இற்கும் சேவையில் ஈடுபடும். தினமும் காலை 6.30 மணிக்கு யாழ். பஸ் நிலையத்தில் இருந்து கிளிநொச்சிச் சாலைப் பேரூந்து ஒன்று நாவற்குழி, தனங்கிளப்பு, பூ நகரி ஊடாக ஸ்கந்தபுரத்துக்குச் சேவையில் ஈடுபடும். அத்துடன் ஸ்கந்த புரத்தில் இருந்து இதே பாதை வழியாக பி.ப 1.45 மணிக்குப் புறப்பட்டு யாழ். பஸ் நிலையம் வந்தடையும் என்றுள்ளது. இதேவேளை இப் பாதையூடாக நேற்றுப் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டன. மோட்டார் சைக்கிளிலும் பலர் பிரயாணம் செய்தனர். அரச உத்தியோகத்தர்களும் பிரயாணம் செய்ததைக் காண முடிந்தது.இளைஞர்கள் பொதுமக்கள் பலரும் திறந்து வைக்கப்பட்ட பாலத்தைப் பார்வையிடச் சென்று திரும்பியதைக் காணக் கூடியதாக இருந்தது.சுற்றுலா செல்வதைப் போல பலர் சென்று திரும்பினர். |

No comments:
Post a Comment