Saturday, March 5, 2011

தலைமையகம் கோப்பாய்ப் பகுதிக்கு உடனடியாகவே மாற்றப்பட்டுள்ளது

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை இராணுவத்தினர் யாழ்.நகரின் மையப் பகுதியில்- சுபாஸ் விடுதியில் அமைத்திருந்த தளத்தைக் கைவிட்டு வெளியேறியுள்ளனர். இங்கிருந்த 52வது டிவிசன் தலைமையகம் கோப்பாய்ப் பகுதிக்கு உடனடியாகவே மாற்றப்பட்டுள்ளது

யாழ்.நகர மையப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த பிரதேசத்தில் - விக்ரோரியா வீதியில் உள்ள சுபாஸ் விடுதியில்- இலங்கை இராணுவத்தின் 51வது டிவிசன் தலைமையகம் 15 ஆண்டுகளாக இயங்கி வந்தது.

1995 டிசம்பர் 2ம் திகதி யாழ்ப்பாண நகருக்குள் புகுந்து சிறிலங்காப் படையினர் சுபாஸ் விடுதியைக் கைப்பற்றி இந்தத் தளத்தை அமைத்திருந்தனர்.


இந்தத் தளத்தில் இருந்தே இன்று படையினர் முற்றாக வெளியேறியுள்ளனர். இதையடுத்து சுபாஸ் விடுதி மீளவும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

51வது டிவிசன் தலைமையகம் கோப்பாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நிரந்தரப் படைத்தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டுக்கு இன்று பயணம் மேற்கொண்ட இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கோப்பாயில் 51வது டிவிசனின் புதிய தலைமைத் தளத்தைத் திறந்து வைத்தார்.

கோப்பாயிலுள்ள விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


கோப்பாய் படைத் தலைமையகத்தில் இராணுவத் தளபதிக்கு படையினர் அணிவகுப்பு மரியாதைகளை அளித்தனர்.

படைத் தலைமையகத் திறப்பு நிகழ்வையடுத்து இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அதிகாரிகள் மற்றும் படையினருடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்

No comments:

Post a Comment